குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட ராசிக்கற்களை அணிய வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. மூல எண் இரண்டை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்ன ராசிக்கல் அணிய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் கணிதத்தின் படி, எந்த மாதமாக இருந்தாலும் 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்த அனைவரும் எண் 2 -ன் கீழ் வருவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அனைவரும் இயல்பாகவே மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் படைப்பாற்றல் மிக அதிகமாக இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுடன் மிக எளிதாகப் பழகுவார்கள். ஆனால், யாராவது ஏதாவது சொன்னால் உடனே மனதில் எடுத்துக் கொள்வார்கள். சின்ன விஷயத்திற்கும் கூட மனம் உடைந்து போவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன ராசிக்கல் அணிய வேண்டும்? எந்த ராசிக்கல் அணிந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
25
முத்துக்களை அணிவது சிறப்பு
எண் கணிதத்தின் படி எண் 2 -க்கு சொந்தமான நபர்கள் முத்துக்களை அணிவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. முத்து சந்திரனை குறிக்கிறது. மனம், உணர்ச்சிகள், உள்ளுணர்வை கட்டுப்படுத்த இந்த முத்துக்கள் உதவுகின்றன. இயல்பாகவே இந்த தேதியில் பிறந்தவர்கள் உணர்ச்சி உறுதியற்ற தன்மை, பதட்டம், எந்த முடிவுகளையும் எடுப்பதில் சிரமப்படுவார்கள். எனவே, அவர்கள் முத்து அணிவதன் மூலம் அந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நடக்கும். முத்துவுடன், வெள்ளை பவளம் போன்ற பிற ரத்தினங்களையும் அவர்கள் அணியலாம்.
35
முத்து அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஜோதிடத்தில், முத்து மிகவும் மங்களகரமான ரத்தினமாக கருதப்படுகிறது. இது சந்திரனின் ரத்தினமாக கருதப்படுகிறது. இது அமைதி, நல்வாழ்வு, உணர்ச்சி சமநிலைக்கு அடையாளம். ஜோதிடத்தின் படி, ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக உள்ளவர்கள் நிச்சயமாக முத்து அணிய வேண்டும். மேலும், ஒருவர் தனது திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால், அவர் நிச்சயமாக முத்து அணிய வேண்டும். இதிலிருந்து நீங்கள் பயனடையலாம்.
திங்கட்கிழமை சந்திர கிரகத்துடன் தொடர்புடையது என்பதால் திங்கட்கிழமை முத்து அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தங்கத்தை விட வெள்ளியுடன் சேர்த்து முத்து அணிவது சிறந்தது. முத்தை வலது கை சுண்டு விரலில் அணிய வேண்டும். இந்த எண் 2 -ல் பிறந்தவர்கள் முத்து அணிவதன் மூலம் மனம் அமைதியாக இருக்கும். மனமும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
55
முக்கிய குறிப்பு
சிக்கல் அணிவது ஜோதிட நம்பிக்கைகளைப் பொறுத்தது. இதற்கு ஒரு தகுதியான ஜோதிடரின் ஆலோசனை பெறுவது நல்லது, ஏனெனில் தனிப்பட்ட ஜாதகத்தில் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ரத்தினங்கள் மாறுபடலாம். ராசிக்கற்கள் மோதிரமாகவோ, பதக்கமாகவோ அல்லது நகையாகவோ அணியப்படுகின்றன. கல் உடலுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது ஜோதிட நம்பிக்கை.