Baba Vanga Predictions 2026: பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா கணிப்பின்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என விரிவாக பார்க்கலாம்.
பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். இவர் கணித்த பல விஷயங்கள் நடந்துள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 2026-ன் முதல் வாரம் (ஆகஸ்ட் 3 முதல் 9 வரை) தொடங்க உள்ளது. இந்த வாரத்தில் உருவாகும் சுப யோகங்களால், 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். அந்த ராசிகள் எவை எனப் பார்ப்போம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியில் புதிய பொறுப்புகளும், வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் விரிவாக்கம் செய்ய திட்டமிடுபவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கிறது. சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல வாய்ப்புகள் வரலாம். வேலை மாற்றத்தை பற்றி யோசிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நிதி திட்டமிடல் வெற்றிகரமாக அமையும், தேவையில்லாத செலவுகள் கட்டுக்குள் வரும். மாணவர்களுக்கு இது ஒரு முன்னேற்றமான வாரமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். புதிய வேலையைத் தொடங்க அல்லது பெரிய முடிவுகளை எடுக்க இந்த நேரம் சாதகமானது. தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.
66
கும்ப ராசி பலன்கள்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி ரீதியாக லாபகரமாக இருக்கும். புதிய தொடர்புகள் எதிர்காலத்தில் உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும். தொழில் வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடலாம். சிறிய உடல்நலப் பிரச்சனைகளை புறக்கணிக்காமல் இருந்தால், இந்த வாரம் இனிமையாக அமையும்.