பணம் செல்லாமல் போகும், தங்கம் விலை உச்சம் தொடும்.! பொருளாதாரத்தில் புயல் வீசும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!

Published : Feb 08, 2026, 03:45 PM IST

2026 ஆம் ஆண்டில் உலகம் சந்திக்கப் போகும் பொருளாதார மாற்றங்கள் குறித்து பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா கணிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

PREV
16
Baba Vanga Prediction About Gold

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வங்கா. பார்வை மாற்றுத்திறனாளியான இவர் உலகத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே கணித்து பிரபலமடைந்தவர். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் உலகம் சந்திக்க இருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. அவர் கூறிய கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

26
தங்கம் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள்

பாபா வங்காவின் கணிப்புப்படி 2026 ஆம் ஆண்டில் உலக நாடுகள் மிகப்பெரிய பண நெருக்கடியை சந்திக்கும் என்று கூறியுள்ளார். தற்போதைய காகித பணம் முறை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரும் குழப்பம் நிலவும் என்றும், உலகளாவிய கடன் சுமை மற்றும் வங்கி அமைப்புகளின் பலவீனம் காரணமாக மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

36
செம்பின் தேவை உயரும்

பொருளாதார வீழ்ச்சியின் பொழுது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாக உலோகங்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று பாபா வங்கா கூறியுள்ளார். தங்கம் வெள்ளி மற்றும் செம்பு ஆகியவற்றின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளி மற்றும் செம்பு ஆகியவை தங்கத்திற்கு இணையான முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கணித்துள்ளார். செம்பின் தேவை அதிகரிப்பதால் செம்பு ‘புதிய தங்கம்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு மதிப்பு பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

46
பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள்

உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பதற்றங்கள், அதிகாரப் போட்டிகள் ஆகியவை உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும். 2026ல் ஏற்படக்கூடிய நிலநடுக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உலக சங்கிலியை பாதித்து பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தும். செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார முறைகள் பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.

56
உண்மையாகும் பாபா வங்கா கணிப்புகள்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பாபா வங்காவின் கணிப்புகளை மெய்பிப்பது போல இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை இருப்பு வைக்க தொடங்கியுள்ளதும், பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்றத் தன்மையும் உலோகங்களின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது.

66
கவனிக்க வேண்டியவை

பாபா வங்காவின் கணிப்புகள் பலமுறை உண்மையாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒரு வழிகாட்டுதலே தவிர உறுதியான முடிவுகள் அல்ல. மேலும் பாபா வங்காவின் கணிப்புகள் எழுத்துப்பூர்வமானவை கிடையாது. அவரின் வாய்மொழி கணிப்புகள் அவர்களது சீடர்களால் குறிப்பு எடுக்கப்பட்டவை என்பதால் இதன் உண்மைத் தன்மை குறித்து கேள்விகள் உள்ளது. இருப்பினும் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி 2026 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories