Astrology: சில தினங்களில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!

Published : Aug 21, 2025, 11:50 AM IST

ஆகஸ்ட் 27 ஆம் தேதி சந்திரன் கன்னி ராசியில் நுழையும் பொழுது செவ்வாய் கிரகத்துடன் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
மகாலெட்சுமி ராஜயோகம் 2025

ஜோதிட சாஸ்திரங்களின்படி 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து, தங்களது ராசிகளை மாற்றுகின்றன. அந்த வகையில் சந்திரனும் தற்போது ராசியை மாற்ற இருக்கிறார். சந்திரன் வேகமாக நகரும் கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை நாட்கள் தங்கி இருக்கிறார். இது போன்ற சூழ்நிலையில் சந்திரன் சில கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில் சந்திரன், செவ்வாய் கிரகத்துடன் இணைந்து மகாலட்சுமி ராஜ யோகத்தை உருவாக்க இருக்கிறார். சந்திரன் மற்றும் செவ்வாய் இணைவால் உருவாகும் இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி தேவியின் அருளை பெற்று தரவுள்ளது. மகாலட்சுமி ராஜயோகம் உருவாவதால் பலனடையும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வேத நாட்காட்டியின் படி கிரகங்களின் தளபதியாக இருக்கும் செவ்வாய் கன்னி ராசியில் இருக்கிறார். ஆகஸ்ட் 25 ஆம் தேதி சந்திரன் காலை 8:28 மணிக்கு கன்னி ராசிக்குள் நுழைந்து, ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 7:21 மணி வரை கன்னி ராசியில் பயணிக்கிறார். இதன் காரணமாக மகாலட்சுமி ராஜயோகம் 54 மணி நேரம் நீடிக்கும். அதன் பின்னர் அவர் துலாம் ராசிக்குள் நுழைகிறார். இந்த 54 மணி நேரத்தில் பின்வரும் ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும்.

25
கன்னி ராசி

கன்னி ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய் இணைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் பல வழிகளில் நன்மை பயக்க உள்ளது. கன்னி ராசியின் லக்னத்தில் இந்த யோகம் உருவாகிறது. இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன்கள் கைக்கு வந்து சேரும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். தாயார் வழி உறவுகளுடன் பிணைப்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

35
கடக ராசி

கடக ராசியின் மூன்றாவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. கடக ராசிக்காரர்களின் தொடர்பு திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக வணிகம் மற்றும் வேலையில் நீங்கள் நிறைய நன்மைகளை பெறலாம். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் வேலையைப் பார்த்து உயர் அதிகாரிகள் உங்களிடம் பெரிய பொறுப்பை ஒப்படைக்கலாம். இதனுடன் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் உணர்வுகளை மற்றவர்களுக்கு முன்னால் வெளிப்படையாக வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் குறையும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் நல்ல நன்மைகளைப் பெறலாம். நீண்ட காலமாக நிலவி வந்த உடல்நலப் பிரச்சனைகள் சரியாகும்.

45
கும்ப ராசி

சந்திரன் - செவ்வாய் கிரகங்கள் இணைந்து உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை பயக்கும். கும்ப ராசியின் எட்டாவது வீட்டில் இந்த இணைப்பு நடைபெறுகிறது. இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல நன்மைகளை பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். புதிய வேலைக்கான தேடலும் முடிவடையும். நிதிநிலைமை சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும். தொழில் செய்து வருபவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கும், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தொழில் தொடங்குவதற்கும் சிறந்த காலமாகும்.

55
ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் பிற ராஜயோகங்கள்

ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் சூரியனும் சுக்கிரனும் தங்கள் ராசிகளை மாற்றப் போகிறார்கள். இதன் காரணமாக பல ராஜயோகங்கள் உருவாகப் போகின்றன. இந்த வாரம் சுக்கிரன் கடக ராசியில் நுழைகிறார். இதன் காரணமாக புதனுடன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. சூரியன் சிம்ம ராசியில் நுழையும் பொழுது கேதுடன் இணைந்து ஒரு யோகத்தை உருவாக்குகிறார். இது தவிர சம்சப்தகம், ஷடாஷ்டகம், கஜலட்சுமி, நவபஞ்சம், மகாலட்சுமி போன்ற பல ராஜயோகங்கள் இந்த வாரம் உருவாகின்றன. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் இந்த வாரம் சிறப்பு பலன்களைப் பெற உள்ளனர்.

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையானது ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகள் மற்றும் பிற மூலங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. தகவலை தெரிவிப்பது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒருவரின் ஜாதகம், கிரக நிலைகள், தசா புத்திகளைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் பலன்கள் வேறுபடலாம். எனவே அனுபவமிக்க ஜோதிடரை கலந்தாலோசிப்பது நல்லது)

Read more Photos on
click me!

Recommended Stories