ஆகஸ்ட் 27: சிம்ம ராசிக்கான இன்றைய ராசி பலன்.! தொட்டதெல்லாம் பொன்னாகும்.! பார்ப்பதெல்லாம் காசாகும்.! செமத்தியான நாள்.!

Published : Aug 27, 2025, 02:37 AM IST

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாள். தொழில், குடும்பம், காதல் வாழ்க்கை என அனைத்திலும் நன்மைகள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும், உறவுகளில் இனிமை பெருகும்.

PREV
14
சிம்மம் (Leo): மிகவும் அதிர்ஷ்டமான நாள்.!

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக அமையும். உங்களின் தன்னம்பிக்கை மிக அதிகரிக்கும். புதிய முயற்சிகளை எளிதில் தொடங்க முடியும். பணியிடத்தில் உங்கள் உழைப்பும், நேர்மையும் மேலாளர்களால் பாராட்டப்படும். தொழிலில் எதிர்பாராத லாபம் வரும். அதிகாரப்பூர்வ இடங்களில் உங்களின் மதிப்பு உயரும்.

24
வருமானத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும்.!

பணவியல் ரீதியில் பார்க்கும்போது, வருமானத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். பழைய முதலீடுகள் லாபம் தரும். நிலம், சொத்து, வாகன தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை உருவாகும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தினால் நிதி நிலை வலுப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அன்பும் பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் இனிமையான தருணங்கள் பகிர்ந்து கொள்வீர்கள். உறவினர்கள் சந்திப்பு கிடைக்கலாம்.

34
துணையுடன் இனிமை அதிகரிக்கும்.!

காதல் வாழ்க்கையில் துணையுடன் இனிமை அதிகரிக்கும். புதிய உறவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களுக்கு மனைவி/கணவரின் பாசமும் நம்பிக்கையும் வலுப்படும். பெண் பார்க்கும் படலம் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலம் சுபமாகும். காலை முதல் மாலை வரை நல்ல விஷயங்கள் நடந்தேறும் என்பதால் உங்களக்கு இன்று சிறந்த நாள்.

44
ஆரோக்கியம் வலுவாகும்.!

உடல்நலத்தில் சிறிய சோர்வு இருந்தாலும், பெரிய பிரச்சினைகள் வராது. சூரிய வழிபாடு செய்தால் ஆரோக்கியம் வலுவாகும். பரிகாரம்: சூரியனை வணங்கி நீராட்டு செய்யுங்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம் வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன்

Read more Photos on
click me!

Recommended Stories