Astrology Predictions: ஜோதிட சாஸ்திரத்தின்படி 5 ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அரசு வேலை கைகூடும் யோகம் மற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவை எந்தெந்த ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அரசு வேலை கிடைக்கும் யோகம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இந்த ராசியைச் சேர்ந்த இளைஞர்கள் அரசுப் பணியில் அமர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அந்த வகையில், அரசு வேலை வாய்ப்பைப் பெறவிருக்கும் அதிர்ஷ்டம் செய்த 5 ராசிகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்,
26
1. சிம்ம ராசி
சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு தலைமைப் பண்பு இயல்பாகவே இருக்கும். இவர்களது ராசிக்கு இந்த ஆண்டில் அரசாங்க உத்தியோகம் அல்லது உயர் பதவிகள் தேடி வர வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் சிம்ம ராசி மாணவர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கும். அரசுத் துறை சார்ந்த தேர்வுகளில் வெற்றி பெற்று உயர் அதிகாரியாகப் பதவியேற்கும் யோகம் இவர்களுக்கு உண்டு.
36
2. கன்னி ராசி
புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களின் நுண்ணறிவு மற்றும் துல்லியமான செயல்பாடு அவர்களைத் துறையில் சிறந்து விளங்கச் செய்யும். குறிப்பாக கணக்காளர், நிர்வாகத் துறை, வங்கித் துறை மற்றும் மத்திய அரசுப் பணிகள் தொடர்பான தேர்வுகளுக்குத் தயாராகும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக உள்ளது. நீண்ட நாட்களாகக் காத்திருந்த அரசு வேலைக்கான நல்ல செய்தி இவர்களைத் தேடி வரும்.
செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசியினர் எதற்கும் அஞ்சாத தைரியம் கொண்டவர்கள். காவல்துறை, ராணுவம், தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவத் துறை போன்ற அரசு சார்ந்த சவாலான துறைகளில் பணிபுரியும் யோகம் இவர்களுக்கு அதிகம். கடினமான போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற இவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இப்போது சிறப்பான பலனைத் தரும்.
56
4. கும்ப ராசி
சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற கும்ப ராசிக்காரர்களுக்கு சமூக சேவை மற்றும் பொதுத் துறை சார்ந்த வேலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். அரசுத் துறையில் இருக்கும் உயதவி மற்றும் சலுகைகள் இவர்களுக்கு எளிதில் கிடைக்கும். அரசுப் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் கும்ப ராசி இளைஞர்களின் கனவு இந்த காலகட்டத்தில் நனவாக வலுவான வாய்ப்புகள் உள்ளன.
66
5. மகர ராசி
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள் எதிலும் ஒழுக்கமும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களாக விளங்குவார்கள். இவர்களது கடின உழைப்புக்குரிய அங்கீகாரம் எப்போதும் தாமதமாக கிடைத்தாலும், அது நிலையானதாக இருக்கும். அரசுப் பணிகள் மற்றும் நிர்வாகத் துறை சார்ந்த தேர்வுகளுக்கு தீவிரமாகப் படித்து வரும் மகர ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் அரசு வேலை கைகூடி வருவதற்கான யோகம் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கே வழங்கப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்கள் மற்றும் ராசி பலன்கள் பாரம்பரிய ஜோதிட நூல்கள், கணிப்புகள் மற்றும் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. இவை எங்குள்ள தனிப்பட்ட நபர்களின் எதிர்காலத்தையும் உறுதியாக உத்தரவாதம் செய்யாது. அரசுப் பணி என்பது தனிப்பட்ட நபர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, கல்வித் தகுதி மற்றும் அரசு நடத்தும் போட்டித் தேர்வு முடிவுகளைப் பொறுத்தே அமையும். வாசகர்கள் இதனைப் பொதுவான வழிகாட்டுதல் தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.