Astrology: சூரிய பார்வையால் கோடிகளை குவிக்க போகும் 3 ராசிகள்.! ஜூன் மாதம் முதல் தொட்டதெல்லாம் துலங்குமாம்.!

Published : May 22, 2026, 08:51 AM IST

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூன் மாதத்தில் சூரிய பார்வை மூன்று ராசிகளுக்கு அபாரமான அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் தொழில், பணவரவு, குடும்ப மகிழ்ச்சி என அனைத்திலும் உயர்வை சந்திப்பார்கள். 

PREV
15
அதிகாரம், புகழ், பணவரவு

ஜோதிட  சாஸ்திரத்தில் சூரியன் என்பவர் அதிகாரம், புகழ், பணவரவு மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். குறிப்பாக ஜூன் மாதத்தில் சூரிய பகவான் மேற்கொள்ளும் இடமாற்றம் அதாவது பார்வை மாற்றம் சில ராசிகளுக்கு அபாரமான முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  சூரிய பகவானின் நேரடி பார்வை இவர் மீது விழுவதால் இதுவரை தடுமாறிக் கொண்டிருந்த வாழ்க்கை திடீரென உயர்வு பெறும் சூழ்நிலை உருவாகும். பணவரவு, தொழில் வளர்ச்சி, புதிய வாய்ப்புகள், குடும்ப மகிழ்ச்சி என பல நல்ல விஷயங்கள் இவர்களின் வாழ்க்கையில் குவியப்போகின்றன என்றால் அது மிகையல்ல. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.

25
ரிஷபம் - பதவி உயர்வு, பண வரவு

ஜூன் மாதம் முதல் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் தொடங்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். சூரிய பகவானின் பார்வை உங்கள் தொழிலும் பணவரவிலும் அபார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் இனி லாபம் மட்டுமே உங்களை வந்து சேரும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக காத்திருந்த வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு உங்களை வந்தயைடும் வாய்ப்பு உருவாகும் என்றும் ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.  தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் குவியும் என்பதோடு முதலீடு செய்த பணம் நல்ல லாபத்தை தரும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.  குடும்பத்தில் இருந்த மனஅழுத்தங்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும் எனவும் வீட்டில் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.  நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் அதிகரிக்கும் என்பதால் இந்த காலத்தில் எடுத்த முடிவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் என்பதால் இனி ரிஷப ராசிகாரர்களுக்கு நல்ல காலம்தான்.

35
சிம்மம் - இனி வெற்றி மட்டுமே கிடைக்கும்

சூரியன் ஆதிக்கம் செலுத்தும் ராசியான சிம்மத்திற்கு இந்த ஜூன் மாதம் பொற்காலமாகவும் வசந்தகாலமாகவும் அமையப்போகிறது. இதுவரை முயற்சி செய்த பல காரியங்களில்  இனி வெற்றி மட்டுமே கிடைக்கும். அரசு தொடர்பான அனைத்து வேலைகளும் சாதகமாக முடியும். அதிகாரம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதால் ஜூன் மாதம் முதல் நீங்கள் ஆடி காரில் உலாவருவீர்கள். தங்க தட்டில் சாப்பிடுவீர்கள். வங்கி கணக்கில் பணம் குவியத்தொடங்கும் என்பதால் வருமானவரி கட்டுவதற்கு உங்களை தயார்படுத்திகொள்ளுங்கள். 

இனி பணவரவு பல மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது என்றும் தொழிலில் புதிய கிளைகள் தொடங்கும் யோகம் உண்டு. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

45
தனுசு - வெளிநாட்டு வாய்ப்புகள், புதிய தொழில் முயற்சிகள்

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பார்வை எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் பணவரவையும் தரப்போகிறது. வெளிநாட்டு வாய்ப்புகள், புதிய தொழில் முயற்சிகள் மற்றும் பெரிய அளவிலான வருமானம் கிடைக்கும் சாத்தியம் அதிகம் என்பதால் இந்த காலத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜூன் மாதம் முதல் உங்களுக்கு நீண்ட நாட்களாக நின்றிருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

கடன் பிரச்சினைகள் குறைந்து சேமிப்பு பல மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், அமைதி நிலவும். மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூட உருவாகலாம். ஜூன் மாதம் முதல் இவர்களின் வாழ்க்கை புதிய திருப்பத்தை எடுக்கும்.

55
பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு அர்க்யம் செலுத்தி, சிவப்பு மலர்களால் வழிபாடு செய்வது நல்ல பலனை அதிகரிக்கும். மேலும் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்தால் தொழில், பணம் மற்றும் ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஜூன் மாதம் இந்த 3 ராசிகளுக்கும் அதிர்ஷ்ட கதவுகளை திறக்கப்போகும் மாதமாக பார்க்கப்படுகிறது. முயற்சியுடன் செயல்பட்டால் கோடிகளை குவிக்கும் வாய்ப்புகளும் இவர்களை தேடி வரலாம்.!  திருமணத்திற்காக காத்திருப்பவர்களு இந்த காலம் வசந்த காலம்.

Read more Photos on
click me!

Recommended Stories