அடிக்கடி வரும் கெட்ட கனவால் தூக்கம் கெட்டு போகுதா? தடுக்கும் வழிகள் இதோ..!!

First Published | Sep 7, 2023, 5:22 PM IST

நீங்கள் அடிக்கடி கெட்ட கனவுகளால் பாதிக்கப்படுவீர்களா? ஜோதிடம் படி அதற்கான தீர்வுகள் இங்கே உள்ளன.
 

ராகு கனவுகளின் அதிபதி. ஜோதிடம் படி ராகு சந்திரனுடன் இருக்கும்போது சிலருக்கு நல்ல கனவுகள் மற்றும் கெட்ட கனவுகள் வரும்.

நாம் காணும் கனவுகள் நமது எதிர்காலத்தை குறிக்கின்றது என்று ஜோதிடம் கூறுகிறது. ஆனால் சில கனவுகள் எவ்வித தொடர்பும் இல்லாமல் நமக்கு பயத்தை மட்டுமே கொடுக்கும் இந்த மாதிரியான கனவுகளுக்கு ஜோதிடத்தில் தீர்வுகள் உள்ளது.

இதையும் படிங்க:  இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? நல்லதா, கெட்டதா?

Tap to resize

கெட்ட கனவுகளில் இருந்து விடுபட, வீட்டின் தரையை உப்பு நீரை கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக நீங்கள் தூங்க செல்வதற்கு முன் இவ்வாறு செய்வது மிகவும் நல்லது.
 

அதுபோல் வெள்ளைத் துணியில் கருஞ்சீரகத்தை கட்டி நீங்கள் தூங்கும் தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். இவ்வாறு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

மற்றொரு தீர்வு, நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு கீழ் பூண்டு மற்றும் கிராம்பு வைத்து தூங்க வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களுக்கு கெட்ட கனவுகள் வரவே வராது. அது மட்டும் இல்லாமல் இவை கெட்ட கனவு வருவதை தடுக்கவும், உங்கள் தூக்க பிரச்சனை தீர்க்க உதவுகிறது.

இதையும் படிங்க: Bad Dreams : கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க இந்த சின்ன பரிகாரம் செய்யுங்க!

மேலும் நீங்கள் தூங்கும் முன் உங்கள் நெற்றியில் தேங்காய் நீரை தடவி தூங்கினால் கெட்ட கனவு வராது. தலையணைக்கு கீழ் தேங்காய் எண்ணையை வைத்தும் தூங்கலாம். இவ்வாறு செய்தால் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும்.

Latest Videos

click me!