அட்சய திருதியை 2026.. குபேரனின் ஆசி பெற்ற 4 ராசிகள்.. தங்க மழை கொட்டப் போகுது!

Published : Apr 13, 2026, 12:21 PM IST

Akshaya Tritiya: 2026 ஆம் ஆண்டிற்கான அட்சய திருதியை வரும் 19ம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், குபேரனின் ஆசி பெற்ற 4 ராசிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
16
அட்சய திருதியை 2026

2026 ஆம் ஆண்டிற்கான அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அட்சய என்ற சொல்லுக்கு குறையாதது அல்லது வளரக்கூடியது என்று பொருள். ஆகவே இந்த நாளில் தொடங்கும் காரியங்கள் மற்றும் வாங்கும் பொருட்கள் பன்மடங்கு பெருகும் என்பது மக்களை நம்பிக்கை. ஆகையால் தான் இந்த நாளில் மக்கள் தங்கம் வாங்குகின்றனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அந்த வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். எனவே தான் அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை சக்கை போடு போடுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியையின்போது மேஷத்தில் சூரியனும் ரிஷபத்தில் சந்திரனும் வளமான நிலையில் இருப்பதால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது என்றே சொல்ல வேண்டும். அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

26
மேஷம்

2021 ஆம் ஆண்டுக்கான அட்சய திருதியை மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை கொடுக்கப் போகிறது. ஏப்ரல் 19ம்ம் தேதிக்கு பிறகு இவர்களுக்கு தன்னம்பிக்கை தைரியமும் அதிகரிக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தொழில் புரிபவர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்த நல்ல நேரம் இது. பொருளாதாரரீதியாக உங்களுக்கு பண வரவு வந்து கொண்டே இருக்கும்.

36
ரிஷபம்

உங்கள் ராசியில் சந்திரன் உச்சம் பெற்று இருப்பதாலும் சுக்கிரனின் ஆதிக்கம் இருப்பதாலும் அட்சய திருதியை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களின் நிதி மேலாண்மை சிறப்படையும். எதிர்பாராத வழிகளில் இருந்தும் வருமானம் வந்தடையும். நீங்கள் செயல்படுத்தும் எந்த ஒரு காரியமும் வெற்றியை தேடி தரும். வீட்டில் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்ப உறுப்பினர்களின் இருந்து முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

46
சிம்மம்

2026 ஆம் ஆண்டுக்கான அட்சய திருதியை சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு பொன்னான தருணம் என்று சொல்ல வேண்டும். இவர்களுக்கு அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த திட்டங்கள் வேகம் எடுக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தொழிலில் பெரிய லாபம் பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரம்.

56
விருச்சிகம்

அட்சய திருதியை விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொன்னான பலன்களை கொண்டு வரப் போகிறது. நீங்கள் நிதித்துறையில் சிறந்த பலன்களை பெறுவீர்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். குடும்ப சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பழைய முதலீடு கணிசமான லாபத்தை கொடுக்கலாம். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மிக முக்கியமாக கடன் சுமைகள் குறையும். நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும்.

66
அட்சய திருதியை நாளில் தங்கம் தான் வாங்கணுமா?

மற்ற ராசிக்காரர்களை விட மேற்கண்ட இந்த 4 ராசிகள் அட்சய திருதியை மூலம் மிகப்பெரும் பலன்கள் பெறுவார்கள். அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா> மற்ற பொருட்கள் வாங்கக் கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையில் கல் உப்பு, பருப்பு மற்றும் தானியங்கள் தண்ணீர் பானை மற்றும் புதிய ஆடைகள் ஆகியவற்றை வாங்கினாலும் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என ஐதீகம் சொல்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. 

Read more Photos on
click me!

Recommended Stories