
Aippasi Month Rasi Palan 2024 in Tamil: சூரசம்ஹாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், தீபாவளி உள்ளிட்ட சிறப்பு விசேஷ நாட்களை கொண்ட இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு எந்த மாதிரியான பலன்களை கொடுக்க போகிறது என்று பார்க்கலாம்… இது வெறும் பொதுவான பலன்கள் தான். அவரவர் ஜாதகத்தில் கிரக நிலைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.
நாளுக்கு நாள் மக்களின் எதிர்காலம் பற்றி எண்ணம் தோன்றுகிறது. நேற்று, இன்றை விட நாளை எப்படி இருக்க போகிறது என்பது தான் ஒவ்வொருவரது சிந்தனை. இந்த ஐப்பசி மாத ராசி பலன் வேலை, தொழில், வியாபாரம், கல்வி, பிரச்சனைகள், ஆரோக்கியம், காதல், திருமணம் பற்றிய தகவல்களை கொடுக்கிறது. அதைப் பற்றி ரத்தின சுருக்கமாக பரிகார பலன்களுடன் பார்க்கலாம் வாங்க..
12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் வசந்தமான மாதமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
பரிகாரம்: வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம்:
எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியாகும். வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
பரிகாரம்: வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்ல பலன் அளிக்கும்.
30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் ராஜ யோகம் – இந்த 3 ராசிக்கு தொழில், வியாபாரம் ஓஹோனு இருக்குமா?
மிதுனம்:
அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். காசு, பணம் தேடி வரும். மாணவர்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும்.
பரிகாரம்: புதன் மற்றும் சனிக்கிழமை நாட்களில் பெருமாள் வழிபாடு செய்வது அவசியம்.
அக்டோபரில் சூரியன்-செவ்வாய் சஞ்சாரம் – பணம், தொழில், ஆரோக்கியத்தில் யாருக்கு நல்ல பலன் கிடைக்கும்?
கடகம்:
வசதி வாய்ப்புகள் கூடும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மதிப்பு, மரியாதை உயரும். பொருளாதார நிலை உயரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது அவசியம்.
சிம்மம்:
வாய கொடுத்து மாட்டிக் கொள்ள கூடாது. பேச்சில் நிதானம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் உயரும், சேமிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பரிகாரம்: சிவபெருமான் மற்றும் கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
கன்னி:
வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். குடும்ப உறவு மேம்படும்.
பரிகாரம்: புதன் மற்றும் சனிக்கிழமை நாட்களில் பெருமாள் வழிபாடு செய்வது அவசியம்.
அக்டோபரில் சூரியன்-செவ்வாய் சஞ்சாரம் – பணம், தொழில், ஆரோக்கியத்தில் யாருக்கு நல்ல பலன் கிடைக்கும்?
துலாம்:
கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: செவ்வாய் பகவான் மற்றும் லட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.
விருச்சிகம்:
வாய்ப்புகள் பறிபோகும், வேலை இழக்கும் சூழல் உருவாகும். நிதி பற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அமைதியாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை வழிபாடு செய்வது அவசியம்.
12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?
தனுசு:
பல வழிகளிலிருந்து நன்மை வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். பணப்பிரச்சனை தீரும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். யோசித்து முடிவு எடுப்பது நல்லது.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமியை வழிபாடு செய்வது நல்ல பலன் அளிக்கும்.
அக்டோபரில் சூரியன்-செவ்வாய் சஞ்சாரம் – பணம், தொழில், ஆரோக்கியத்தில் யாருக்கு நல்ல பலன் கிடைக்கும்?
மகரம்:
நிதி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலையில் கவனமாக இருப்பது அவசியம். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பரிகாரம்: சிவபெருமானையும், விநாயகப் பெருமானையும் வழிபாடு செய்வது அவசியம்.
கும்பம்:
எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். புதிய புதிய வாய்ப்புகள் உருவாகும். வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தல் வேண்டும்.
12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?
மீனம்:
மதிப்பு, மரியாதை கூடும். காசு, பணம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மெதுவாக சென்று வருவது அவசியம்.
பரிகாரம்: வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.