இந்து மதத்தில் ஜோதிட சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு உண்டு. ஜோதிட சாஸ்திரம் என்பது ஒருவரது ஆளுமை மற்றும் எதிர்காலத்தை கணித்து விட முடியும். அந்த வகையில் சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் தங்களது குடும்பத்தை அதிகமாக உருவாக்க விரும்புவார்களாம். அதாவது அவர்கள் அதிக குழந்தைகளை பெற்று பெரிய குடும்பமாக வாழ விருப்பப்படுவார்களாம். எனவே எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்வார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
25
பிப்ரவரி
ஜோதிட சாஸ்திரத்தின் படி, பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புவார்கள். இவர்களிடம் பச்சபாதம் மற்றும் இரக்க குணம் நிறைந்திருக்கும். இதனால் இவர்கள் பெரிய குடும்பத்தை நல்ல முறையில் பராமரிப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்களது குடும்பத்திற்கு அதிக முன்னுரிமை அளிப்பார்கள், அன்பான சூழலை உருவாக்குவதில் தீவிர ஆர்வம் காட்டுவார்கள். இதுவே இவர்கள் ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்குவதற்கான நோக்கம். இவர்கள் நிறைய குழந்தைகளை பெற்றாலும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். மேலும் குழந்தைகள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தும் இடத்தை உருவாக்குவதே இவர்களது நோக்கம்.
35
ஜூலை
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜூலை மாதத்தில் பிறந்த நபர்கள் எப்போதுமே கவனத்தில் மையமாக இருக்க வேண்டுமென்று விருப்பம் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் பெரிய குடும்பமாக இருக்க வேண்டும் விரும்புவார்கள். இவர்களிடம் இருக்கும் தலைமைத்துவ திறன்களால் நிறைய குழந்தைகளை பெற்றெடுப்பார்கள். இவர்களின் அன்பு உற்சாகம் நிறைந்த குணத்தால் குடும்பத்தை நல்ல வழியில் நடத்துவார்கள். முக்கியமாக இவர்கள் நிறைய குழந்தைகள் பெற்றாலும் நல்ல பெற்றோராக சிறந்து விளங்குவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அக்கறைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் வாழ்க்கையின் முக்கியமான விஷயம் எதுவென்றால் அவர்களது குடும்பம் தான். இவர்களது லட்சியம் ஒரு அன்பான மற்றும் அழகான குடும்பத்தை உருவாக்குவது தான். அதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறார்கள். இதனால் தான் இவர்கள் நிறைய குழந்தைகளை பெற்று பெரிய குடும்பமாக வாழ்வார்கள்.
55
டிசம்பர்
ஜோதிடத்தின்படி, டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சாகச மனப்பான்மைக்கு பயிர் பெற்றவர்கள். அதாவது பயணம் புது புது அனுபவங்கள் மீதான ஆர்வம் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்களின் இந்த ஆர்வம் பெரிய குடும்பத்தை உருவாக்க வழி வகுக்கிறது. இதனாலேயே இவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவார்கள். மேலும் இவர்கள் நிறைய குழந்தைகளை பெற்று அவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள்.