சோதனையான காலங்களிலும் எதிர்மறை எண்ணங்களைப் புறந்தள்ளி, மனதை ஒருமுகப்படுத்தி இலக்கை நோக்கிப் பயணிக்கும் இயல்பு சில ராசிகளுக்கு இயல்பாகவே இருக்கிறது. சுற்றியுள்ள சூழல் எப்படியிருந்தாலும், தங்கள் இலக்கை அடைவதில் இவர்கள் கவனம் சிதறாமல் செயல்படுவார்கள்.
வாழ்வில் தடங்கல்களும் சவால்களும் வருவது இயல்பு. ஆனால், தடைகளைக் கண்டு அஞ்சாமல், இலக்குகளை அடைவதில் உறுதியோடும் தீர்க்கமான பார்வையோடும் செயல்படும் குண இயல்பு சில ராசிகளுக்கு பிறப்பிலேயே அமைந்திருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் அமைப்பும், ராசியின் தத்துவங்களும் (நிலம், நெருப்பு, காற்று, நீர்) ஒருவரின் மனவுறுதியைத் தீர்மானிக்கின்றன. எந்தச் சூழல் வந்தாலும் திசைமாறாமல், நினைத்த காரியத்தை முடித்தே தீரும் ஆற்றல் கொண்ட அந்த 6 ராசிக்காரர்களைப் பற்றியும், அவர்களின் தனித்துவமான வெற்றி உத்திகளைப் பற்றியும் இங்கு விரிவாகக் காண்போம்.
27
மகரம் (Capricorn):
சனி பகவானை அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள், கால நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் அதே வேளையில் இலக்கில் இருந்து சற்றேனும் விலகாதவர்கள். நிலத் தத்துவத்தைக் கொண்ட இவர்கள், எவ்வளவு பெரிய தடையோ அல்லது தோல்வியோ வந்தாலும் நிதானத்தைக் இழப்பதில்லை. உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை தராமல், திட்டமிட்ட பாதையில் படிபடியாக முன்னேறி வெற்றியடைவார்கள். 'செயலே சிறந்த வழிபாடு' என்ற கொள்கை உடைய இவர்கள், காரியம் முடியும் வரை ஓய்வெடுக்க மாட்டார்கள்.
37
விருச்சிகம் (Scorpio) :
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற விருச்சிக ராசிக்காரர்கள், தீவிரமான மனவுறுதிக்கும் கூர்மையான கவனத்திற்கும் பெயர் பெற்றவர்கள். நீர்த் தத்துவ ராசியாக இருந்தாலும், உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் லட்சியத் தீ இவர்களை ஓயவிடாது. தங்களின் திட்டங்களை வெளியே காட்டிக் கொள்ளாமல், அமைதியாக உழைத்து இறுதி நேரத்தில் வெற்றியை வெளிப்படுத்துவது இவர்களின் பாணி. பிறரின் எதிர்மறை விமர்சனங்களைக்கூடத் தங்கள் வெற்றிக்கான மூலதனமாக மாற்றும் அசாத்திய ஆற்றல் இவர்களுக்கு உண்டு.
நெருப்புத் தத்துவத்தைக் கொண்ட மேஷ ராசியினர், தடைகளைக் கண்டு பின்வாங்காமல் எதிர்த்து நின்று போராடும் இயல்புடையவர்கள். சவால்கள் நிறைந்த காரியங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளும் இவர்களுக்குத் தொழில் மற்றும் பணியிடங்களில் எழும் தடைகள் ஒரு பொருட்டே அல்ல. வேகமும் துணிச்சலும் இவர்களின் இரு கண்களாகச் செயல்படும். 'முடியாது' என்ற வார்த்தையைத் தங்கள் அகராதியிலேயே வைத்திருக்க மாட்டார்கள்; எந்தச் சூழலிலும் முதல் ஆளாக நின்று காரியத்தை முடிப்பார்கள்.
57
கன்னி (Virgo) :
புதனின் ஆதிக்கம் பெற்ற கன்னி ராசிக்காரர்கள், காரியத்தை வெறும் வேகத்தால் மட்டுமின்றி விவேகத்தாலும் நுணுக்கத்தாலும் சாதிப்பவர்கள். பகுத்தறிவு சிந்தனை கொண்ட இவர்கள், ஒரு வேலையைத் தொடங்கும் முன்பே அதில் வரக்கூடிய தடைகளைக் கணித்து, அதற்கான மாற்று வழிகளையும் (Plan B) தயார் செய்து வைத்திருப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்களையும் கச்சிதமாகச் செய்து முடித்து, காரியத்தில் முழுமையான வெற்றியை உறுதி செய்வார்கள்.
67
ரிஷபம் (Taurus) :
சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட ரிஷப ராசியினர், அமைதியான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் காரிய சித்தயில் மிகவும் பிடிவாதக்காரர்கள். எவ்வளவு பெரிய தடங்கல்கள் வந்தாலும், தாங்கள் எடுத்துக் கொண்ட பாதையில் இருந்து சிறிதும் விலக மாட்டார்கள். இவர்களின் பொறுமையும் விடாமுயற்சியும் தான் இவர்களின் மிகப்பெரிய பலம். பிறர் பாதியில் கைவிடும் வேலைகளைக் கூட, தங்களின் அசைக்க முடியாத மனவுறுதியால் செய்து முடித்துக் காட்டுவார்கள்.
77
தனுசு (Sagittarius):
குரு பகவானின் ஆதிக்கம் பெற்ற தனுசு ராசிக்காரர்கள், வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல இலக்கை நோக்கி மட்டுமே பயணிப்பவர்கள். பாதையில் தடைகள் வரும் போது சோர்வடையாமல், அதிலிருந்து புதிய அனுபவங்களைக் கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வார்கள். இவர்களின் நேர்மறை சிந்தனையே காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். தூர நோக்குப் பார்வையோடு செயல்பட்டு, எப்பேர்ப்பட்ட கடினமான சூழலிலும் தங்களின் முதன்மை இலக்கை எட்டிப்பிடிப்பார்கள்.