ஜோதிடப்படி மற்றவர்களின் பொய்-உண்மையை அறியாமல், இரக்கப்பட்டு உதவி செய்து எளிதில் ஏமாறும் ராசிக்காரர்கள் யார்? பிறரை கண்மூடித்தனமாக நம்பி ஏமாறும் சுபாவம் கொண்ட அந்த முக்கிய ராசிகளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்!
மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் உன்னதமான ஒன்று. ஆனால், அதே நம்பிக்கை அளவுக்கு மிஞ்சும்போது அதுவே ஏமாறுவதற்கும் வழிவகுத்து விடுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பிரத்யேகமான குணநலனும், மனநிலையும் இயற்கையிலேயே அமைந்திருக்கும். சிலர் பிறப்பிலேயே அதீத சுபாவம், இரக்க குணம், மற்றவர்களைத் தீவிரமாக நம்பும் தன்மை அல்லது உணர்ச்சிவசப்படும் போக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். இத்தகைய மென்மையான மனோபாவத்தை மற்றவர்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் போது, அவர்கள் எளிதில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடுகிறது. 12 ராசிகளில் தங்களின் தூய்மையான அன்பினாலும், வெள்ளந்தி குணத்தினாலும் பிறரால் அடிக்கடி ஏமாற்றப்படும் 5 ராசிகள் எவை என்றும், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஜோதிட ரீதியான வழிகள் என்ன என்றும் இங்கு விரிவாகக் காண்போம்.
26
மீன ராசி :
குருவின் ஆதிக்கம் பெற்ற மீன ராசியினர், இயற்கையிலேயே அதிக கருணை உள்ளம் கொண்டவர்கள். மற்றவர்களின் கஷ்டங்களைக் கேட்கும் போது, அதைத் தங்கள் சொந்தப் பிரச்சனையாகக் கருதி உதவி செய்ய ஓடுவார்கள். பிறர் சொல்லும் பொய்களை உண்மை என்று நம்பி, நிதி ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எளிதில் ஏமாந்து விடுவார்கள்.
36
மேஷ ராசி :
செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற மேஷ ராசியினர், வெளிப்படையான மனதுடையவர்கள். மற்றவர்களிடம் எந்தப் ஒளிவுமறைவும் இன்றிப் பழகுவதால், எதிர் இருப்பவர்களும் அப்படியே இருப்பார்கள் என தவறாகக் கணித்து விடுவார்கள். ஆராய்ந்து பார்க்காமல் அவசரப்பட்டு முடிவெடுப்பது மற்றும் நபர்களை விரைவாக நம்புவது இவர்களின் ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணமாகிறது.
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசியினர், மிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். பாசத்திற்கும் அன்பிற்கும் ஏங்கும் இவர்கள், பொய்யான அன்பைக் காட்டி நெருங்குபவர்களை அடையாளம் காணத் தவறிவிடுவார்கள். உறவுகளின் மீது வைக்கும் அளவு கடந்த நம்பிக்கையே இவர்களுக்குப் பல நேரங்களில் ஏமாற்றத்தைத் தருகிறது.
56
துலாம் ராசி :
சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற துலாம் ராசியினர், யாருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்கள். மற்றவர்களின் தவறான யோசனைகளுக்கும் வேண்டுகோள்களுக்கும் 'வேண்டாம்' என்று மறுத்துச் சொல்லத் தயங்குவதால், சுயநலம் பிடித்தவர்களால் இவர்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள்.
66
தனுசு ராசி :
குருவின் ஆதிக்கம் பெற்ற தனுசு ராசியினர், உலகத்தில் உள்ள அனைவருமே நல்லவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். மனிதர்களின் உள்நோக்கங்களை ஆராயாமல், அனைவரையும் உடனடியாகத் தம் நெருங்கிய வட்டத்தில் சேர்த்துக் கொள்வார்கள். இவர்களின் இந்த அதீத நம்பிக்கையே இவர்களுக்குச் சறுக்கலை ஏற்படுத்துகிறது.