5 Planets Conjunction in May 2026 : வரும் மே மாதம் ஒரே ராசியில் 5 கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. இது பஞ்சக்கிரஹி யோகம் என்று அழைக்கப்படுகிறது. இது 6 ராசியினருக்கு அதிர்ஷ்ட கதை தட்ட போகிறது.
5 Planets Conjunction in May 2026 : ஜோதிட ரீதியாக பார்க்கையில் வரும் மே மாதம் ஒரே ராசியில் 5 கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. சூரியன், சந்திரன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய 5 கிரகங்களும் ஒரே நேரத்தில் தங்களது நிலைகளை மாற்றுகின்றன. இந்த மாற்றம் காரணமாக சில ராசியினரின் வாழ்க்கை முற்றிலுமாக மாறப் போகிறது. மே மாதத்தில் செவ்வாய் மேஷ ராசிக்கும், சுக்கிரன் மிதுன ராசிக்கும், புதன் மற்றும் சூரியன் ரிஷப ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். மே மாத இறுதியில் புதன் தனது நிலையை மாற்றி மிதுன ராசிக்குள் நுழைவார். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் குறிப்பிட்ட ராசியினருக்கு லாபம் தரப்போகிறது. அந்த ராசியினர் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
27
மேஷ ராசி
மேஷ ராசிக்கே அதிபதியே செவ்வாய் பகவான். வரும் மே 11 ஆம் தேதி தனது சொந்த ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறும். வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை மாற நினைப்பவர்களுக்கு இது சரியான நேரம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
37
கன்னி ராசி
கன்னி ராசியினருக்கு மே மாதத்தை பொறுத்தவரை மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் எதிர்பாராத சில அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கப் பெறுவீர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும் புதிய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்
47
துலாம் ராசி
துலாம் ராசியைச் சேர்ந்த அன்பர்களுக்கு மே மாதத்தை பொறுத்தவரையில் ஐந்து கரங்களை சஞ்சாரம் அற்புதமான பலன்களை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். புதிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம். கணவன் மனைவிக்கிடையில் அன்னியோன்யம் அதிகரிக்கும் . காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்
57
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சூரியன் மே 15, 2026 அன்று ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இது ஆரோக்கியத்தையும், தலைமைப் பண்புகளையும் தரும். புதனும் மே 15, 2026 அன்று ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கிறார். ரிஷப ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை திடீர் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களில் சிலருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவிப்பார்கள். வெளிநாட்டு விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் அதிகப் பலன் பெறுவார்கள். திருமண வாழ்வில் உறவுகள் வலுப்பெறும்.
67
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதத்தை பொருத்தவரையில் செல்வ செழிப்பு உண்டாகும். இதனால் வரையில் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க பெறும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும்.
77
மிதுன ராசி
மிதுன ராசிக்கு அதிபதி புதன். புதன் மே 29 அன்று தனது சொந்த ராசிக்குள் பிரவேசிக்கிறார். சுக்கிரன் மே 14, 2026 அன்று மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். இது மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நேரம். புதிய தொழில் தொடங்க சாதகமான சூழல் இருக்கும். நீங்கள் தீர்த்த யாத்திரை செல்லலாம். அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி வரலாம். இது உங்களுக்கு மிகவும் சுபமான நேரம். இதிலிருந்து நீங்கள் முழுப் பயனையும் பெறுவீர்கள். நீங்கள் கணிசமான நிதி ஆதாயங்களைப் பெறவும் வாய்ப்புள்ளது. கடந்த கால முதலீடுகள் லாபகரமாக இருக்கும். வெளிநாட்டு வாய்ப்புகளும் வரலாம்.