தனுசு ராசிக்கு ஜாக்பாட் அடித்தால்... மற்ற ராசிக்காரங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா? இதோ லிஸ்ட்!

Published : Feb 06, 2026, 07:24 PM IST

Dhanusu Rasi Jackpot Other Zodiac Signs Reactions in Tamil : தனுசு ராசிக்கு ஜாக்பாட் அடித்தால் மற்ற ராசிக்காரர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
112
மேஷம்

மூணு வருஷத்துக்கு முன்னாடி நான்தானே உன்னை டிக்கெட் வாங்கவே சொன்னேன். நான் சொல்லவே இல்லையென்றால் உனக்கு இவ்வளவு பணம் கிடைத்திருக்காது. என்னுடைய பங்கு எங்கே?" என்று கேட்டுக்கொண்டே, ஒரு கார் வாங்குவதற்காக தனுசு ராசிக்காரரை ஏர்போர்ட் வரை துரத்துவார். இப்படித் தான் மேஷ ராசியினரின் ரியாக்ஷன் இருக்கும்.

212
ரிஷபம்

இவ்வளவு பணமா என்று அதிரச்சியோடு இவருக்குப் பதற்றத்தில் வயிறு கலங்கும். உடனே தனுசு ராசிக்காரரை கூப்பிட்டு, பணத்தை வீணாக்காமல் உடனே நிலமோ, விவசாய பூமியோ என்று வலியுறுத்துவார். ரிஷபத்தைப் பொறுத்தவரை, தனுசு ராசிக்காரர் மில்லியன் கணக்கான பணத்தை பயணங்களில் செலவு செய்வது, சிறை தண்டனைக்குரிய ஒரு குற்றம் என்று நினைப்பார்கள்.

312
மிதுனம் :

தனுசு ராசிக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு என்று நியூஸ் பரப்பிவிடுவார்கள். அதோடு இருந்தால் சரி, கூடுதலாக காசு பணம் சேர்த்து வைத்து சும்மா அள்ளிவிடுவார்கள். நமது நண்பன் தனுசுவை எப்படித் திரும்பப் பெறுவது?" என்று ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிப்பார். பழைய ஏழ்மையான காலங்களை நினைவூட்டி தனுசுவுக்கு நீளமான கடிதங்களை எழுதுவார், இதனால் தனுசு குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டும் என்பதே அவர் திட்டமாக இருக்கும்.

412
கடகம் : 

தனுசு ராசியினரை நினைத்து நினைத்து உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விடுவார்கள். அப்பாடா, இப்போதாவது தனுசு நம் எல்லோரையும் ஒன்றாக வைத்திருக்க ஒரு பெரிய வீட்டை வாங்குவார் என்று ஆசைப்பட்டுக் கொள்வார். ஆனால் தனுசு ராசியினர் தனியாக வெளிநாடோ வெளியூரோ, சுற்றுலாவோ செல்வது குறித்து தெரிந்து கொண்டால் பணம் வந்தால் நண்பர்கள் மாறிவிடுவார்கள்" எனத் துரோகத்தைப் பற்றி ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்துவிடுவார்கள். இது தான் கடகம் ராசியினரின் ரியாக்‌ஷனாக இருக்கும்.

512
சிம்மம்: 

மற்ற ராசியினரை போன்று இல்லாமல் தனக்கு அவ்வளவு தான் எண்ணிக்கொண்டு தன்னிடமுள்ள பணத்தை கொண்டு ஆடம்பரமாக இருப்பார். அதோடு தானும் ஒரு கோடீஸ்வரன் என்று காட்டிக் கொள்வார். தனுசு ராசியினரின் இந்த நிலைக்கு வந்ததில் எனக்கும் பங்கு உண்டு, நான்தான் அவனை உருவாக்கினேன்" என்று பெருமையாகப் பேசி வெளிச்சத்தைத் தன் பக்கம் திருப்புவார்.

612
கன்னி :

உன் முட்டாள் தனத்தால் இந்தப் பணம் எப்படி எல்லாம் கரையப் போகிறது" என்று தனுசு ராசியை நினைத்து பொறாமைக் கொள்வார். அதோடு பறிதாபமும் கொள்வார். இதற்கு முன்னதாக தனுசு ராசியினர் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். தனுசுவின் சந்தோஷத்தைத் தடுத்து, தான் மட்டுமே புத்திசாலி என்பதை நிரூபிக்கப் பார்ப்பார். 

712
துலாம்:

தனுசு ராசிக்கு கிடைத்திருக்கும் ஜாக்பாட் நினைத்து மகிழ்ச்சி அடைவார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்து விலகிவிடுவார். தனுசு தனது பிரைவேட் ஜெட்டில் அழைத்தால் கூட, "வீட்டில் வேலை இருக்கிறது" என்று பொய் சொல்லித் தட்டிக்கழிப்பார். தனுசு பணத்தை எடுக்கும்போது தனக்குக் கீழ்மை உணர்ச்சி வந்துவிடக்கூடாது என்பதில் துலாம் ராசியினர் கவனமாகவே இருப்பார்கள்.

812
விருச்சிகம் :

ஜாக்பாட் கிடைத்த பிறகு தனுசு ராசியினர் ஜாலியாக இருப்பதைப் பார்த்தால் இவருக்குப் பிடிக்காது. இது கஷ்டப்பட்டு உழைக்காமல் கிடைத்த படம். அதனால் கடைசி வரை நினைக்காது. இதில் ஆசீர்வாதம் இருக்காது" என்று ஆன்மீக ரீதியாக டயலாக் விடுவார்.  நள்ளிரவில் நரகத்தைப் பற்றிய பயமுறுத்தும் செய்திகளை அனுப்பி, "உன் மறுமையைப் பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது என்று பீதியை கிளப்புவார்.

912
தனுசு:

தனுசு ராசிக்கு மட்டும் ஜாக்பாட் கிடைத்துவிட்டால் அவ்வளவு தான். அவர்களை கையிலேயே பிடிக்க முடியாது. யாருக்கும் போனும் பண்ண மாட்டார், யாரிடமும் தெரிவிக்கவும் மாட்டார். யாருக்கும் தெரியாத ஒரு தீவுக்கு 'ஒன்-வே' டிக்கெட் புக் செய்வார். இவரைப் பொறுத்தவரை பணம் என்பது சுதந்திரம். வாட்ஸ்அப்பில் "குட்பை, இருண்ட உலகமே!" என்று ஸ்டேட்டஸ் பதிவிட்டு, பணம் பேங்க் அக்கவுண்டிற்கு வருவதற்குள் எஸ்கேப் ஆகிவிடுவார்.

1012
மகரம்

தனுசு ராசியை சேர்ந்தவரை பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாவார். கஷ்டப்பட்டு உழைக்கும் எனக்கு ஜாக்பாட் கிடைக்கவில்லை. ஆனால், உனக்கு கிடைத்துவிட்டது. அதுவும் இவ்வளவு பெரிய தொகையா? என்று எண்ணி நொந்து கொள்வார். அதோட கஷ்டப்படாமல் கிடைத்த பணம் சீக்கிரம் அழிந்து விடும் என்று சாபம் விடுவார். அப்படிப்பட்ட குணம் கொண்டவர் தான் இந்த மகரம் ராசிக்காரர்கள்.

1112
கும்பம்

கும்ப ராசியினர் தான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடையும் குணம் கொண்டவர்கள். ஒரு வழியாக தனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துவிட்டு என்று எண்ணி பூரிப்படைவார். தன் நண்பன் முழு சுதந்திரமான மனிதனாக மாறுவதை ஒரு அறிவுப்பூர்வமான வெற்றியாகக் கொண்டாடுவார். 

1212
மீனம்

ஜாக்பாட் அடித்த தனுசு ராசியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடுவார். ஆனால், மீன ராசியினர் வீட்டுக்கு சென்றால், அவரது குடும்பத்தினர், அவனுக்கு பணத்தின் மீது ஆசை இல்லை என்றாலும் கூட அவனுக்கு ஜாக்பாட் அடிக்குது. அப்படியிருக்கும் போது நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிற என்று துளைத்தெடுப்பார்கள். மீன ராசியினர் குடும்ப உறுப்பினர்களைப் பொறுத்த வரையில் மீனம் ஒரு துரதிர்ஷ்டசாலி. ஆனால் மீனத்தைப் பொறுத்தவரை வாழ்க்கை பணத்தில் இல்லை என்பதை நன்கு புரிந்த் கொண்டவர்கள். மீன ராசியினருக்கும், தனுசு ராசியினருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். அதாவது இந்த ராசியினருக்கு அதிபதியே குரு பகவான் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories