2025 இந்த 3 ராசிகளுக்கு பொற்காலமான ஆண்டு; கோடீஸ்வர யோகம் உண்டு!

First Published | Dec 23, 2024, 8:05 AM IST

2025 is Golden Year for These Top 3 Lucky Zodiac Signs : 2025 புத்தாண்டு இந்த 3 ராசியினருக்கு கோடீஸ்வர யோகத்தை கொண்டு வந்து தர போகிறது. அது யாருக்கெல்லாம் என்று இந்த தொகுப்பில் காண்போம்.

2025 is Golden Year for These Top 3 Lucky Zodiac Signs

2025 is Golden Year for These Top 3 Lucky Zodiac Signs : கிரகங்களின் அதிபதி புதன் பகவான். அடிக்கடி தனது இயக்கத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். அந்த வகையில் கடந்த 18 ஆம் தேதி விருச்சிக ராசியில் நேர்கதியில் சஞ்சாரம் செய்தார். புதனின் இந்த சஞ்சாரம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரையில் இருக்கும். இது முக்கியமான 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தர போகிறது.

புதன் பகவானை தொழில் காரகன் என்றும் அழைப்பார்கள். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதியே புதன் தான். புதனின் இந்த சஞ்சாரம் 2025ல் தொழிலதிபர்களுக்கு பொற்காலமான ஆண்டாக அமைய போகிறது. கன்னி, ரிஷபம் மற்றும் சிம்மம் ராசியினருக்கு 2025 புத்தாண்டு எப்படி இருக்க போகிறது என்று இந்த தொகுப்பில் காண்போம்.

Mercury Transit 2025 Palan Tamil

ரிஷபம் ராசி:

புதனின் விருச்சிக ராசி சஞ்சாரம் ரிஷப ராசிக்கு ஏராளமான நன்மைகளை கொண்டு வந்து தர போகிறது. எல்லா துறைகளிலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம். பொருளாதாரம் உயரும். கடனிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும்.

Tap to resize

Budhan Peyarchi in Viruchiga Rasi Palan Tamil

கன்னி ராசி:

விருச்சிக ராசியில் புதன் பகவான் நேரடியாக சஞ்சாரம் செய்வது கன்னி ராசிக்கு சாதகமான பலனைத் தரும். வெளியூர், வெளிநாடு என்று டிராவல் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள்ன் உதவிகள் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். 2025ல் திருமணம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

2025 is the golden year for these 3 signs

சிம்மம் ராசி:

புதன் நேரடியாக சஞ்சாரம் செய்வது சிம்ம ராசியினருக்கு நல்ல பலனைத் தரும். மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி கொடுக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். காதலர்களுக்கு ஏற்ற காலம். பொருளாதார பிரச்சனை தீரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்துமே முடிவடையும்.

Latest Videos

click me!