நார்ச்சத்து மிகுந்த மதுரக்கிழங்கு, வைட்டமின்கள் நிறைந்தது. நல்ல சூரிய ஒளி, நீர் தேங்காத இடம் தேவை. நான்கு மாதங்களில் அறுவடை செய்து லாபம் ஈட்டலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறு விவசாயிகளுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும். எல்லா மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. அதேபோல் செம்மண், களிமண், கரிசல்மண், மணல் பாங்கான வயல்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இது வரரும் என்பதால் இதனை அனைவரும் சாகுபடி செய்யலாம்.
27
கொடிகளை நடவு செய்தால் அதிக லாபம்.!
20-30 செ.மீ. நீளமுள்ள, 4 அல்லது 5 கணுக்களுள்ள வலுவான கொடித் துண்டுகளை நடவு செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் பாத்திகள் அமைத்து நடவு செய்ய வேண்டியது காட்டாயம்.
37
நிலத்தை தயார் செய்ய வேண்டும்.!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதற்கு நிலத்தை நன்றாக தயார் செய்வது கட்டாயம். நிலத்தை உழுது, வரப்புகள்/மேடுகள் அமைத்து, அடியுரம் இட்டு நடவு செய்ய வேண்டும். பசுந்தாள் உரம் மற்றும் இயற்கை உரம் சாகுபடியை அதிகரிக்கும்.