சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்.! 24 மணி நேரத்தில் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம்- அசத்தல் அறிவிப்பு

Published : Aug 23, 2025, 07:55 PM IST

தமிழக அரசு விவசாயிகளுக்கு 24 மணி நேரத்தில் பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையவழியில் விண்ணப்பித்த அன்றே கடன் பெறலாம். விவசாயிகள் இனி கடன் பெற நேரில் செல்லத் தேவையில்லை.

PREV
14
விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிலும் பல்வேறு கடன் உதவி திட்டங்கள் மூலமாக விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் 24 மணி நேரத்தில் கடன் உதவி வழங்கிடும் வகையில் கடன் உதவி திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்மாதிரியான ஒரு திட்டத்தைத் தற்போது தொடங்கி வைத்துள்ளார்கள். வேளாண் பெருமக்கள் இணையவழியில் விண்ணப்பித்த அன்றே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் தான் அந்த திட்டம், பயிர்க்கடன்களைப் பெறுவதற்காகத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு இனி விவசாயிகள் நேரில் செல்லத் தேவையில்லை.

24
ஒரே நாளில் விவசாயிகளுக்கு கடன் உதவி

இணையவழியில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்த பின் கடன் தொகைக்காக இனி ஒரு வாரகாலம் விவசாயிகள் காத்திருக்கவும் தேவையில்லை. கடன் கோரி இணையத்தில் விண்ணப்பித்த அன்றைய தினமே அவர்களுக்குக் கடன் கிடைத்துவிடும். இத்திட்டத்தில் விவசாயி ஒருவர் விண்ணப்பிக்கும் முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் பெருமக்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். 

தங்களது கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்புக்கணக்கு எண் இரண்டில் ஒன்றை மட்டும் கொடுத்தால் போதும். இந்த விண்ணப்பம் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை ஆகிய இரு துறைகளிலும் சரிபார்க்கப்பட்டு அன்றைய தினமே கடன் தொகையானது வேளாண் பெருமக்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

34
எளிமைப்படுத்தப்பட்ட கடன் உதவி திட்டம்

பயிர்க்கடன் பெறுவதற்கு எளிமையான முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைப் போலவே, சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கும் நடைமுறையும், சிறு குறு கடன்களுக்கான நடைமுறையும் எளிமைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பித்த ஒரே நாளில் விவசாயக் கடன் தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுசங்கங்கள் மூலமாக நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிட பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன. 

நாட்டில் கடன் வழங்கும் திட்டங்கள் ஏராளமாக உள்ளன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் அதிகபட்சமாக மூன்று இலட்சம் ரூபாய் வரைகடன் பெற்று, அதனை ஓர் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்ற நடைமுறையும் இருக்கிறது. ஆனால், உடனடியாகக் கடன் வழங்கும் திட்டம் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிடமாடல் ஆட்சியில் தான் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

44
17 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடன்

அதுவும், ஒரே நாளில் கடன் வழங்கும் திட்டமாக இதனை மாண்புமிகு முதலமைச்சர் வடிவமைத்துள்ளார்கள். இதுவரை பயிர்க்கடன்கள் பெறுவதற்கு பட்டா, சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். இதனை வாங்கி விண்ணப்பிப்பதற்குத் தாமதம் ஆகிவிடுகிறது; கடன்பெற மேலும் தாமதம் ஆகிவிடுகிறது என்று வேளாண் பெருமக்கள் கவலையுடன் கூறிவந்தார்கள்.

 வேளாண் பெருமக்கள் கவலையைப் போக்கி இருக்கிறார்கள் . கடந்த ஆண்டில் 15 ஆயிரத்து 62 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை 17.37 இலட்சம் விவசாயிகள் பெற்று பயன் அடைந்தார்கள். 4.43 இலட்சம் பேருக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கால்நடைவளர்ப்புப் பிரிவின் கீழ்கடன்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும்; 3 ஆயிரம் கோடி ரூபாய் கால்நடை பிரிவின் கீழ் கடன் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories