Agriculture Training: மாதம் ரூ.50,000 லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு.! பயிற்சி எங்க தர்றாங்க தெரியுமா.?!

Published : Dec 29, 2025, 07:45 AM IST

இயற்கை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பதன் மூலம் மாதம் ரூ.50,000 வரை நிலையான லாபம் ஈட்ட முடியும். நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் வழங்கும் சிறப்புப் பயிற்சி, இந்தத் தொழிலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறது.

PREV
111
மாதத்திற்கு ரூ.50,000 வரை நிலையான லாபம்.!

விவசாயம் சார்ந்த உபதொழில்களில் இன்று மிகவேகமாக வளர்ந்து வரும் துறை நாட்டுக்கோழி வளர்ப்பு. ரசாயனம் கலந்த உணவுகளுக்கு மத்தியில், இயற்கையான முறையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கும் அதன் முட்டைகளுக்கும் சந்தையில் எப்போதும் தட்டுப்பாடு நிலவுகிறது. சரியான தொழில்நுட்பம் மற்றும் நோய் மேலாண்மையைக் கடைப்பிடித்தால், குறைந்த முதலீட்டில் ஒரு மாதத்திற்கு ரூ.50,000 வரை நிலையான லாபம் ஈட்ட முடியும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் (KVK) சிறப்புப் பயிற்சியை வழங்குகிறது.

211
சரியான ரகத் தேர்வு மற்றும் கொட்டகை அமைப்பு

கோழிகள் தங்குவதற்கு காற்றோட்டமான, மேடான பகுதியில் கொட்டகை அமைக்க வேண்டும். ஆழ்கூளம் (Deep Litter) முறையில் வளர்க்கும்போது தரையில் தேங்காய்த் நார் அல்லது மரத்தூள் தூவி சுத்தமாகப் பராமரிப்பது நோய்த் தொற்றைக் குறைக்கும்.

311
தகுந்த ரகங்களைத் தேர்வு செய்வது அவசியம்

நாட்டுக்கோழி வளர்ப்பில் வெற்றி பெற அந்தந்தப் பகுதி தட்பவெப்ப நிலைக்குத் தகுந்த ரகங்களைத் தேர்வு செய்வது அவசியம். நாமக்கல் போன்ற பகுதிகளில் சிறுவிடை, பெருவிடை மற்றும் வனராஜா போன்ற ரகங்கள் சிறந்த பலனைத் தருகின்றன.

411
தீவன மேலாண்மையும் செலவு

நாட்டுக்கோழி வளர்ப்பில் 70 சதவீதச் செலவு தீவனத்திற்கே ஆகிறது. லாபத்தை அதிகரிக்க, கடையில் விற்கும் தீவனங்களை மட்டும் நம்பியிருக்காமல், பண்ணையிலேயே அசோலா, கரையான் மற்றும் தானியக் கழிவுகளைப் பயன்படுத்தலாம்.

511
இறைச்சியின் சுவையைக் கூட்டும் ரகசியம்

புறக்கடை வளர்ப்பு

கோழிகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புழு, பூச்சிகளை அவை உணவாக உட்கொள்ளும், இதனால் தீவனச் செலவு பெருமளவு குறையும்.

இயற்கை தீவனம்

கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றை அரைத்துக் கொடுப்பது இறைச்சியின் சுவையைக் கூட்டும்.

611
நோய் தடுப்பு முறைகள்

நாட்டுக்கோழி வளர்ப்பில் மிகப்பெரிய சவால் நோய்த் தாக்குதல் ஆகும். குறிப்பாக 'வெள்ளைக்கழிச்சல்' (Ranikhet) நோய் பண்ணையையே அழிக்கும் வல்லமை கொண்டது. இதைத் தவிர்க்க முறையான தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்.

7-வது நாள்: F1 கண் அல்லது மூக்கு சொட்டு மருந்து.

21-வது நாள்: லசோட்டா (Lasota) தடுப்பூசி.

காலமுறைப் பராமரிப்பு

கோழிகளுக்கு அவ்வப்போது வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீரை வழங்குவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

711
லாபக் கணக்கீடு: மாதம் ரூ.50,000 சாத்தியமா?

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மாதம் 200 முதல் 300 கோழிகளை விற்பனைக்குக் கொண்டு வருவதன் மூலம் ரூ.50,000 லாபத்தை எட்ட முடியும்.

விற்பனை வாய்ப்பு

இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யும்போது கூடுதல் லாபம் கிடைக்கும்.

மதிப்புக்கூட்டல்

கோழி இறைச்சியாக மட்டுமன்றி, முட்டை, குஞ்சுகள் மற்றும் கோழி எரு எனப் பல வழிகளில் வருமானம் ஈட்டலாம்.

811
நாமக்கல் KVK பயிற்சி விவரம்

நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் (KVK) ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.

பயிற்சி நாள்: ஜனவரி 01 (வியாழக்கிழமை)

தலைப்பு: நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள்

தொடர்பு எண்: 04286-266345

இந்த பயிற்சியில் கோழிக்குஞ்சுகள் பராமரிப்பு, தீவன விகிதம் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து வல்லுநர்கள் நேரடி விளக்கம் அளிக்க உள்ளனர்.

911
சுழற்சி முறை வளர்ப்பு (Batch System)

விவசாயிகளுக்கு 1,000 முதல் 1,500 கோழிகளைச் சுழற்சி முறையில் வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோழிகள் விற்பனைக்குத் தயாராக இருக்குமாறு திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இடைத்தரகர்களை  தவிர்த்து, நேரடியாக நுகர்வோருக்கோ அல்லது உணவகங்களுக்கோ விற்பனை செய்வது எப்படி என்றும் பயற்சியில் சொல்லித்தரப்படும். இதனால் ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதல் லாபம் பெறலாம்.

1011
மதிப்புக்கூட்டல் (Value Addition)

வெறும் கோழியாக விற்காமல், முட்டைகளாகவும், ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளாகவும் விற்பனை செய்தல் லாபம் கிடைக்கும். கோழி எருவை இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்யும் முறையையும் சொல்லித்தரப்படும். பயிற்சியில் கற்றுக் கொள்ளும் நோய் மேலாண்மை மூலம் கோழிகளின் இறப்பு விகிதத்தை 5% க்கும் குறைவாகக் கொண்டு வர முடியும். இதுவே மிகப்பெரிய லாபமாகும்.

1111
நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது ஒரு அட்சய பாத்திரம்

திட்டமிட்ட உழைப்பும், முறையான மருத்துவப் பராமரிப்பும் இருந்தால் நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது ஒரு அட்சய பாத்திரம் போன்றது. சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கும், கூடுதல் வருமானம் தேடும் விவசாயிகளுக்கும் இத்துறை ஒரு வரப்பிரசாதம். நாமக்கல் KVK வழங்கும் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி, நீங்களும் ஒரு வெற்றிகரமான பண்ணையாளராக மாறி மாதம் 50 ஆயிரம் ரூபாய் வருமானத்தை உறுதி செய்யலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories