விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்..! ஒரு லட்சம்.. இலவச மின்சாரம் ரெடி... உடனே விண்ணப்பம் செய்யுங்க...

Published : Aug 30, 2025, 10:00 AM IST

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், தகுதி வரம்புகள், மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான வழிகாட்டி. நிலம் வைத்திருப்பவர்கள், இணைந்து விண்ணப்பிப்பவர்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்களையும் இது கொண்டுள்ளது.

PREV
15
விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. அந்த வகையில் விவசாயிகளுகாக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1980களிலிருந்து நடைமுறையில் உள்ளது. 1983-ல் சிறு விவசாயிகளுக்கு (1 HP வரை) அறிமுகப்படுத்தப்பட்டு, 1989-ல் 5 HP வரை விரிவாக்கப்பட்டது. இது தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் (5 HP பம்ப் செட் மோட்டாருக்கு) இலவசமாக வழங்கப்படுகிறது. 

ஆண்டுதோறும் சுமார் 40,000 முதல் 50,000 புதிய இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பயன் அடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி இழப்பீடாக வழங்குகிறது.

25
விவசாயிகள் இலவச மின்சாரம்

இந்த நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் 4 ஆண்டுகளில் 13,058 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 12,319 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்தும் வகையில், தருமபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர் ஆகிய கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதார்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண் மற்றும் கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
இலவச மின்சாரம்- தகுதிகள் என்ன.?

இந்த நிலையில் இலவச விவசாய மின்சாரம் பெற யாருக்கெல்லாம் தகுதி உள்ளது..? விண்ணப்பிப்பது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

  • விவசாய நிலம் உள்ளவர்கள்: குறைந்தபட்சம் 50 சென்ட் (அரை ஏக்கர்) விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்.
  • 2020 ஆகஸ்ட் 5-க்கு முன் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த நிபந்தனை இல்லை; அவர்களின் பழைய விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இலவச இணைப்பு வழங்கப்படும்.
  • ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து: 50 சென்ட் நிலம் இல்லாதவர்கள் 3-4 பேர் இணைந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் அனைவரின் கையொப்பமும் இருக்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் போன்ற பிரிவுகளுக்கு மானிய உதவியுடன் இலவச இணைப்பு (எ.கா., ரூ.25,000 வைப்புத்தொகை அரசு செலுத்தும்).
45
விண்ணப்பிப்பது எப்படி.?

ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள TANGEDCO செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது துணை மின் நிலையத்தில் விண்ணப்பப் படிவத்தை பெறவும்.

ஆன்லைனில்: TANGEDCO இணையதளம் (www.tangedco.gov.in) (www.tangedco.gov.in) அல்லது e-Sevai போர்ட்டலில் (www.eservices.tn.gov.in) (www.eservices.tn.gov.in) பதிவு செய்யலாம். "New Service Connection" என தேர்ந்தெடுத்து "Agricultural" வகையைத் தேர்வு செய்யவும்.

55
தேவையான ஆவணங்கள்
  • நிலப்பட்டா / சிட்டா / அடங்கல் (Land Document).
  • சாதிச் சான்று (Community Certificate), வருமானச் சான்று (Income Certificate - சில சிறப்பு திட்டங்களுக்கு).
  • கிணறு / போர்வெல் ஆவணங்கள் (Well Permit).
  • பம்ப் செட் விவரங்கள் (HP Capacity).

படிவத்தை நிரப்பி, ஆவணங்களுடன் செயற்பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். சாதாரண வரிசையில் விண்ணப்பித்த பின், இலவச திட்டத்திற்கு மாற்ற விண்ணப்பிக்கலாம். சமர்ப்பிப்பதும் 30 நாட்களுக்குள் அறிவிப்பு கடிதம் கிடைக்கும். மாவட்ட TANGEDCO அலுவலகம் சரிபார்த்து, இணைப்பு வழங்கும் 

Read more Photos on
click me!

Recommended Stories