கேலக்ஸி டேப் A9 ஆண்டிராய்டு டேப்லெட் அக்டோபர் 5ஆம் தேதி கேலக்ஸி டேப் A9 இந்தியாவில் அறிமுகமாகும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் மொபைல் மற்றும் டேப்லெட் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிறுவனம் தனது ஆண்டிராய்டு டேப்லெட் விற்பனையை விரிவாக்கும் நோக்கில் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, சாம்சங் கேலக்ஸி டேப் A9 என்ற புதிய ஆண்டிராய்டு டேப்லெட் குறித்த டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் அமேசான் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. வரும் அக்டோபர் 5ஆம் தேதி கேலக்ஸி டேப் A9 இந்தியாவில் அதிகாரபூர்வமாக அறிமுகமாகும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
வெறும் ரூ.45 ஆயிரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை உருவாக்கிய கேரள இளைஞர்! ஆச்சரியத்தில் கார் பிரியர்கள்!
இதனிடையே, கேலக்ஸி டேப் A9 குறித்த டேப்லெட் பற்றிய இதுவரை வெளிவராத விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் கசிந்துள்ளன. அதன்படி, புதிய சாம்சங் கேலக்ஸி டேப் A9 டேப்லெட், ஆக்டா கோர் மீடியாடெக் ஹெலோ G99 பிராசஸர் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
1340x800 பிக்ஸல் எல்சிடி திரையுடன் ஆண்டிராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 5ஜி நெட்வொர்க் வசதியுடன் வரும் புதிய டேப்லெட்களுக்கு மத்தியில் இது 4ஜி நெட்வோர்கை மட்டுமே கொண்டதாக இருக்கும் என்றும் 4GB RAM கொண்டிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த டேப்லெட் பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்தத் தகவல்கள் அனைத்தம் உறுதிசெய்யப்படாத நிலையிலேயே உள்ளன. இதற்கிடையில், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A54 ஸ்மார்ட்போன் பற்றிய புதிய தகவல் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி A54 ஸ்மார்ட்போன் லைம், கிராபைட், ஊதா நிறங்கள் தவிர வெள்ளை நிறத்திலும் கிடைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி A54 மொபைல் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் புதிய கலர் வேரியண்ட் அறிமுகமாகவது அதன் விற்பனையை அதிகரிக்கும் என்று சாம்சங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மருத்துவ நோபல் பரிசு 2023: கொரோனா தடுப்பூசிக்கு வழிவகுத்த இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு