குட்டீஸை கவரும் பிளானுடன் ரெடியாகும் ஆப்பிள் வாட்ச் SE! கலர் கலரா சூப்பரா இருக்கு!

By SG Balan  |  First Published Aug 5, 2024, 4:51 PM IST

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் புதிய SE ஸ்மார்ட்வாட்ச் மாடலை உருவாக்கி வருகிறது. இது குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்ற பிரத்யேக அம்சங்களுடன் பல வண்ணங்களில் கிடைக்கலாம்.


ஆப்பிள் வாட்ச் SE 2024 இந்த ஆண்டின் பிற்பகுதியில் வாட்ச் சீரிஸ் 10 வெளியிட்டு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் பரவிவருகிறது. இந்த வாட்ச் குழந்தைகளை இலக்காகக் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகளைக் கவர்வதற்காக மிகவும் கவர்ச்சிகரமானதாக பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, வழக்கமாக ஆப்பிள் வாட்ச் சீரிஸில் இருப்பதை விட பல கலர் ஆப்ஷன்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் திடமான பிளாஸ்டிக்கைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Tap to resize

Latest Videos

undefined

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் புதிய SE ஸ்மார்ட்வாட்ச் மாடலை உருவாக்கி வருகிறது. இது குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்ற பிரத்யேக அம்சங்களுடன் பல வண்ணங்களில் கிடைக்கலாம். பொதுவாக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு பல கலர் வேரியண்ட்களை வழங்குவதில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட்வாட்ச் அதற்கு விதிவிலக்காக இருக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்து இருக்கிறாரா ஷேக் ஹசீனா? வங்கதேச பிரதமர் பதவி ராஜினாமா!

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மிட்நைட், ஸ்டார்லைட், சில்வர், சிவப்பு மற்றும் பிங்க் ஆகிய கலர் வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. கருப்பு (மிட்நைட்) மற்றும் சில்வர் வேரியண்ட்கள் பல ஆண்டுகளாக உள்ளன. புதிய SE மாடலில் இந்த வண்ணங்களுக்கு மாறாக புதிய கலர் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

பொதுவாக ஆப்பிள் வாட்ச் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அலுமினியத்திற்குப் பதிலாக ஆப்பிள் வாட்ச் SE 2024 இல் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் உற்பத்திச் செலவைக் குறைத்து, மலிவு விலையில் வழங்க முடியும் என்று ஆப்பிள் கருதுகிறது.

இந்த ஆண்டு ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்கள் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களுடன் வெளிவர வாய்ப்பு குறைவு தான் என்று கூறப்படுகிறது. ஐபோன், ஐபேட், மற்றும் மேக் லேப்டாப்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் முதலில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் சீரிஸில் புதிய சிப்செட் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

மார்பக அயர்னிங் என்றால் என்ன? ஆப்பிரிக்கப் பெண்களை வதைக்கும் பழக்கத்திற்குக் காரணம் என்ன?

click me!