ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்ச் புதிதாக சிவப்பு நிறத்தில் அறிமுகமாகியுள்ளது. இது உலக எய்ட்ஸ் தினத்தை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்ச் புதிதாக சிவப்பு நிறத்தில் அறிமுகமாகியுள்ளது. சிவப்பு நிறத்தில் உள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ரெட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலக எய்ட்ஸ் தினத்தை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
எச்.ஐ.வி/எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் சிவப்பு நிற ஆப்பிள் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி எய்ட்ஸ்க்கு எதிரான உலகளாவிய நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.
உலக எய்ட்ஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச்ஓஎஸ் 10 இயங்குதளத்தைக் கொண்டது. சோலார் அனலாக், மெட்ரோபொலிட்டன், வேர்ல்டு டைம், நியூமரல் மோனோ, கிரேடியன்ட், ஸ்ட்ரைப்ஸ் மற்றும் டைபோகிராஃப் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளன.
இந்த சிவப்பு நிற ஆப்பிள் வாட்ச் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் விலை ரூ.41,900 முதல் தொடங்குகிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 புதிய S9 சிப் மற்றும் குவாட்-கோர் நியூரல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இது வேகமான மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. 18 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்ட இந்த வாட்ச் முந்தைய சீரிஸை விட இரண்டு மடங்கு அதிக பிரகாசமான டிஸ்பிளேயுடன் கிடைக்கிறது.
ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE ஆகியவற்றை இதேபோல சிவப்பு நிறத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேற லெவல் ஆடியோ அனுபவம் கொடுக்கும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ்! ரிலீஸ் தேதி எப்போது?