Hyderabad | இப்படியுமா தற்கொலை முயற்சி பண்ணுவாங்க? ; சிங்கத்தின் குகையில் குதித்த இளைஞர் ; வைரல் வீடியோ உள்ளே

By Kanmani PFirst Published Nov 24, 2021, 10:04 AM IST
Highlights

Hyderabad |ஹைதராபாத் மிருகக்காட்சி சாலையில்  உள்ள சிங்கத்தின்  குகைக்குள் இறங்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இளைஞர்களின்  வைரல் மோகம் எல்லை கடந்து சென்றுவிட்டது என்றே சொல்லலாம். ஓடும் ரயில் முன்பு நின்று செல்ஃபி எடுப்பது. வாகனம் ஓட்டியபடி  செல்ஃபி, வெள்ளத்தில் நின்றபடி செல்ஃபி என இன்னுயிரை நீத்த இளைஞர்கள் ஒருபுறம், காதல் விவகாரம், கேம் விளையாட கூடாதென பெற்றோர்கள் திட்டுவதால், ஆசிரியர் கண்டிப்பதால் என உப்பு சப்பில்லாத காரணங்களால் தற்கொலை என இளைய சமூகம் தற்கொலையையே பிரதானமாக கையில் எடுக்கின்றனர். 

அதிலும் வைரலுக்காக விபரீத முடிவெடுப்பவர்கள் குறித்து கவலை அதிகரித்தே வருகிறது. டிஸ்கவரி சேனலில் வருவது போல கொடிய மிருகங்களிடம் மோத கூட  இந்த வைரல் இளைஞர்களை தயாராக்கி விடுகிறது.  சமீபத்தில் கொடிய பாம்பை கையில் பிடிக்க முயன்ற இளைஞர் அந்த பாம்புக்கே பலியான சம்பவம் நாடறிந்ததே. அதோடு பாம்பு கறியை உண்ட மனிதரின் மரணம். காட்டு யானைக்கு முன்னர் செல்ஃபி  எடுக்க முயற்சித்தவரின் பரிதாப நிலை குறித்தும் நாம் கேள்விப்பட்டதுண்டு. அதோடு புலி குகைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்கும் முயற்சியில் தவறி விழுந்து புலிக்கு பலியான இளைஞர் குறித்த செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது 

அந்த வகையில் நேற்று ஒரு இளைஞரின் துணிச்சல் செயல் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு வந்த இளைஞர் ஒருவர்  திடீரென அங்குள்ள சிங்க குகைக்கு மேல் எறியுள்ளார். பாறைகள் மேல் லாவகமாக நடந்து சென்ற அந்த இளைஞர் மெல்ல மெல்ல நகர்ந்து குகைக்குள் குதிக்க முயற்சி செய்துள்ளார். இதை கண்ட பூங்கா நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பார்வையாளர்கள் அனைவரும் பயத்தில் உறைந்திருக்க அந்த இளைஞரை ருசி பார்க்க சிங்கமும் ரெடியாகி விட்டது.

அப்போது சுதாரித்துக்கொண்ட பூங்கா காப்பாளர்கள் சிங்கத்தின் குகை கதவை திறந்து அதை திசை திரும்பியுள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் பாறைகள் மீதிருந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

"

click me!