மீண்டும் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பேசுவதற்கு ஆவலாக இருக்கிறேன் என்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கூறி உள்ளார்.
சென்னை: மீண்டும் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பேசுவதற்கு ஆவலாக இருக்கிறேன் என்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் கூறி உள்ளார்.
தமிழகத்தின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந் நிலையில் மீண்டும் பட்டிமன்றங்களில் பேச ஆர்வமாக இருப்பதாக பாரதி பாஸ்கர் கூறி உள்ளார். தமது உடல்நிலை விவரங்கள் குறித்து பட்டிமன்ற பேச்சாளராக ராஜாவின் யுடியூப் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் பாரதி பாஸ்கர் பேசி இருப்பதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டதால் 22 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். இப்போது உடல்நிலை தேறி வருகிறேன். மீண்டும் பழைய தெம்புடன் மேடையேறி அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
மதங்கள் கடந்து எனக்காக பிரார்த்தனை செய்து உள்ளீர்கள்? நான் எப்படி நன்றி சொல்ல முடியும்…? நான் என்ன செய்துவிட முடியும் உங்களுக்கு? கடவுள் 2வது முறையாக வாய்ப்பு தரும் போது அது மிகவும் அழகாக இருக்கிறது.
உடல்நிலை முழுமையாக தேறிவிட்டேன் என்ற கட்டத்துக்கு நான் இன்னமும் வரவில்லை. ரொம்ப நன்றி என்பதை தவிர வேறு என்ன சொல்லிவிட முடியும்.. திரும்பவும் சந்திப்போம் நன்றி என்று கூறி உள்ளார்.