அட்ராசிட்டியால் ‘அல்லு’ விட்ட டிக்டாக் பிரபலம்… புடிச்சு உள்ளே வச்ச போலீஸ்…

By manimegalai a  |  First Published Nov 6, 2021, 8:32 PM IST

டிக் டாக் பிரபலம் சுகந்தியை மதுரை போலீஸ் கைது செய்து உள்ளே வைத்திருக்கிறது


டிக் டாக் பிரபலம் சுகந்தியை மதுரை போலீஸ் கைது செய்து உள்ளே வைத்திருக்கிறது.

Latest Videos

undefined

இப்போது இருப்பது இணைய உலகம்… இன்னும் சொல்ல போனால் ஒருவரை ஒருவர் இணைக்கும் உலகம். அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தால் வெகுஜனத்தினர் கட்டுண்டு கிடக்கின்றனர். சதா சர்வநேரமும் ஒரு கூட்டம் இதற்குள் புதைந்து கொண்டு செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாத ஒன்று.

குறிப்பாக டிக் டாக்.. இதற்கு தடை விதிக்கப்பட்டாலும் அதன் மவுசு என்னவோ இன்னமும் குறையவில்லை. டிக்டாக், பேஸ்புக், யூடியூப் என்றாலும் எப்போதும் கண் முன் வருபவர்கள் வெகுசிலர் தான்.

அதில் ஒருவர் சுகந்தி. இவரை சுகந்தி என்றால் யாருக்கும் தெரியாது. டிக்டாக் சுகந்தி என்றால் போதும்… டபக்கென்று எல்லாருக்கும் ஞாபகம் வரும். அதற்கு காரணம் சுகந்தி பதிவேற்றும் வீடியோக்கள் சூடாக இருப்பதுதான்.

கன்னாபின்னாவென்று கசமுசா ரேன்ஜூக்கு வீடியோக்கள் இருந்தாலும் இமைப்பதை மறந்து பார்க்கும் ரசிக சிகாமணிகள் இப்பவும் இருக்கின்றனர். இப்படி ஒட்டு மொத்த இளசுகளின் தூக்கத்தை கெடுத்த சுகந்தி இப்போது உள்ளே கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார். அந்த கம்பிகளை அவருக்கு எண்ணும்படி கூறி உள்ளே வைத்திருப்பது மதுரை போலீஸ்.

சிவகாசியை அடுத்த ஆலங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து ஒத்தக்கடை பகுதியில் இருக்கும் தமது தோழியின் வீட்டில் மகளுடன் வசித்து வந்துள்ளார். அவரின் தனிப்பட்ட போட்டோவை எங்கோ லபக்கிய சுகந்தி இன்னபிற வகையறாக்கள் யுடியூபில் ரிலீஸ் செய்திருக்கின்றனர்.

தமது டைவர்ஸ் வழக்கு குறித்து ஒருவருடன் பேசிய பேச்சுகளை ஆபாசமாக சித்திரித்ததாக பாதிக்கப்பட்ட பெண் மதுரை எஸ்பியிடம் புகார் தந்திருந்தார். சுகந்தி உள்ளிட்ட கோஷ்டியால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீது ஒத்தக்கடை காவல்நிலையத்தில் வழக்கும் பதிவாகி இருந்தது. தான் மட்டுமல்ல… தம்மை போலவே பலரையும் இப்படி ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டார் சுகந்தி என்பதும் மனுதாரரின் குற்றச்சாட்டு.

இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சைபர் க்ரைம் பிரிவில் மறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துள்ளது.  இந் நிலையில் வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த டிக்டாக் சுகந்தியை அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளே வைத்திருக்கின்றனர்.

இந்த சுகந்தியின் டிக்டாக் மோகத்தால் அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இப்படி தொடர்ந்து பலர் மனம் புண்படும்படி, சட்டத்துக்கு விரோதமாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை அப்லோட் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கடுமையான எச்சரித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எவ்வளவோ அற்புத விஷயங்களை பதிவிடலாம். மக்களின் கவனத்துக்கு சென்று சேராத ஏராளமான சங்கதிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி ஆராய்ந்து, அறிந்து மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும்.

அதைவிட்டு அதிக லைக்ஸ், அதிக கமெண்ட்ஸ், பெயர், புகழ்,அல்ட்ரா மாடர்ன் என்று நீட்டி முழங்கி பிளான் செய்தால் ஒரு கட்டத்தில் கம்பிகளுக்கு பின்னால் தான் காலத்தை ஓட்ட வேண்டி இருக்கும் என்கின்றனர் காவல்துறையினர்..!

click me!