பிரச்சாரத்தில் கண்கலங்கிய உதயநிதி... முகத்தை மூடி அழுத திமுக நிர்வாகிகள்!!

Published : Apr 13, 2019, 11:20 AM IST
பிரச்சாரத்தில் கண்கலங்கிய உதயநிதி... முகத்தை மூடி அழுத திமுக நிர்வாகிகள்!!

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில்  வத்தலக்குண்டில்  பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் நடந்தது. திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது மேடையில் இருந்த அனைவரையும் அழ வைத்தது.

நேற்றிரவு திண்டுக்கல் மாவட்டத்தில்  வத்தலக்குண்டில் திமுக வேட்பாளர்கள் வேலுச்சாமி, சௌந்தரபாண்டியன் ஆகியோரை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி மரணம் தொடர்பான தமிழக முதல்வர் எடப்பாடியின் விமர்சனத்திற்கு பதில் அளித்தார்.

அப்போது திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து சிகிச்சையும் வெளிப்படையாக நடைபெற்றது. கலைஞர் மரணப்படுக்கையில் இருந்தபோது "எழுந்து வா தலைவா" என தமிழக மக்கள் அழைத்த போதும் மரணம் அவரை தழுவியது. அவர் இறுதியில் ஆசைப்பட்டது போல் அவருடைய அண்ணன் அண்ணா சமாதி அருகே அவர் உடல் அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டபோது எடப்பாடி அரசு இடம் தர முன்வரவில்லை. கலைஞர் இறந்துவிட்டார் என்பதை நினைத்து அழுவதா? இல்ல அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போக போகிறோம் என அழுவதா? இன்று தமிழகமே கண்ணீர் சிந்திய வேளையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இடம் ஒதுக்க உத்தரவிட்டது. கலைஞர் மறைந்தும் போராடி வென்றார் என்று உருக்கமாக  பேசும்போதே உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினார்.

அப்போதுமேடையில் இருந்த  ஐ பெரியசாமி மற்றும் எம்எல்ஏக்கள் செந்தில்குமார், சக்கரபாணி ஆகியோர் முகத்தை மூடி அழுதனர் இதனால் அந்த பிரசாரக் கூட்டத்தில் பெரும் அமைதி நிரம்பியது.

PREV
click me!

Recommended Stories

18+ வயதினருக்கான முக்கிய அறிவிப்பு… மிஸ் பன்னிடாதீங்க.. ரொம்பவே வருத்தப்படுவீங்க…!
தேர்தல் அதிகாரி ரூமிற்கு சென்று அசால்ட் காட்டிய திமுக எம்பி... அதிமுக வென்றதாக மாற்றி அறிவித்ததால் பெரும் சர்ச்சை..! வைரலாகும் வீடியோ..