தீபாவின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு, அதிமுக தள்ளப்பட்டுள்ளது, இதெல்லாம் கால கொடுமை என அமமுக தேனீ வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
தீபாவின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு, அதிமுக தள்ளப்பட்டுள்ளது, இதெல்லாம் கால கொடுமை என அமமுக தேனி வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
நாங்க, தனியாக போட்டியிட்டால், அதிமுக தொண்டர்களின் மனம் புண்படும். எனவே, வர்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என, ஜெ அண்ணன் மகள், தீபா தெரிவித்துள்ளார்.
தான் நடத்தி வரும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை, அதிமுகவுடன் இணைக்க பேச்சு நடத்தி வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். தீபாவின் முடிவு குறித்து அமமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
அம்மா உயிரோடு இருந்தவரை, தீபாவை தன் வீட்டில் சேர்க்கவில்லை; ஒதுக்கியே வைத்திருந்தார். அவரது திருமணத்திற்கும் செல்லவில்லை. அம்மா இறந்த பிறகே, தீபா யார் என தெரிந்தது. தீபாவை, அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால், அண்ணன் தினகரனை, தொண்டர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர். காரணம், தினகரனை, அரசியலுக்கு அழைத்து வந்தவர், அம்மா அவருக்கு, எம்பி பதவி வழங்கி, பொருளாளர், பேரவை செயலாளர் போன்ற பதவிகளை வழங்கி அழகு பார்த்தார். டெல்லியில் பிஜேபி காங்கிரஸ் கட்சிகளை வீழ்த்தி, ஆம் ஆத்மி வெற்றி பெற்றது போல, வர்ற நாடாளுமன்றத் தேர்தலில், அமமுகவும் வெற்றி பெறும் என்றார்.
திண்டுக்கல் தொகுதி, அதிமுகவின் சின்னமான, இரட்டை இலையின் புகழை உருவாக்கிய தொகுதி. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில், அதிமுக போட்டியிடவில்லை. இந்த செயல், "பேஸ்மென்ட் வீக்"என்பதையே எடுத்துக் காட்டுகிறது. துரோகத்தையும், ஊழலையும் மக்கள் ஏற்க போவதில்லை. அதிமுக, கூட்டணிக்கு, மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
மோடி எடப்பாடி அரசுகள் மீது, கடுமையான வெறுப்பு அலை வீசுகிறது. அதனால் தான், தீபாவின் ஆதரவை பெற வேண்டிய நிலைக்கு, அதிமுக தள்ளப்பட்டுள்ளது. தீபாவின் பிரசாரம், அதிமுகவுக்கு பாதகமாகும்; கண்டிப்பாக, சாதகமாக அமையாது என்பது, அவரது சுற்றுப்பயணத்தில் தெரிய வரும். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.