எதிரணியை ஏங்கி ஏங்கி தவிக்க விட்ட பாரிவேந்தர்... பெரம்பலூரில் அலசியதில் கிடைத்த சுவாரஷ்யம்!!

By sathish k  |  First Published Mar 24, 2019, 8:29 PM IST

திமுக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், கூட்டணி கட்சி நிர்வாகிகளை மட்டுமல்ல எதிரணியில் உள்ள நிர்வாகிகளையும் எங்க வைத்துள்ளதும், பாரிவேந்தரின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஏறி  விழும் கூட்டத்தைப்பார்த்தும் வயிற்றெரிச்சலில் திரிகிறார்களாம். 


திமுக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், கூட்டணி கட்சி நிர்வாகிகளை மட்டுமல்ல எதிரணியில் உள்ள நிர்வாகிகளையும் எங்க வைத்துள்ளதும், பாரிவேந்தரின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஏறி  விழும் கூட்டத்தைப்பார்த்தும் வயிற்றெரிச்சலில் திரிகிறார்களாம். 

திமுக தலைமையிலான கூட்டணியில் பாரி வேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி இணைந்தது. அந்த கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதியை முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகனுக்காக பேசி வாங்கிவிட்டார். கடந்த தேர்தலில் பி.ஜே.பி அணியில் பெரம்பலூரில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில் மீண்டும் அதே தொகுதியில் நிற்கிறார்.

Tap to resize

Latest Videos

கடந்த தேர்தலில் தனித்தே 2 லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கிய பாரிவேந்தர், இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் அவரது ஐ.ஜே.கே தொண்டர்கள் மட்டுமல்ல கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.  அதாவது எதிரணியில் நிர்வாகிகள் ஐயோ, இவரு ஏன் நம்ம கூட்டணியில் சேரல? என புலம்பும் அளவிற்கு உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறார்களாம்.

இருக்காதா பின்னே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பெரம்பலூர் குலுங்கியது. திமுக மாவட்ட செயலாளர் கேஎன் நேரு உள்ளிட்ட மாவட்டச்செயலாளர்கள் கேட்ட தொகையை எந்த மறுப்பும் சொல்லாமல் அப்படியே கொடுத்தது தான் கூட்டம் ஏறி விழுந்ததற்கு காரணம் என சொல்கிறார்கள்.

கடந்த 4 நாட்களில் ஸ்டாலின் பங்கேற்ற 8 பொதுக்கூட்டங்களில் முசிறி தான் கட்டுங்கடங்காத கூட்டம் அலைமோதியது.  இப்படி கூட்டணி கட்சியிலுள்ள நிர்வாகிகள் மனசையும் குளிர்விக்கும் பாரிவேந்தரை வெற்றி பெற வைத்து, பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீயா வேலை பார்த்து வருகிறார்களாம்.  

இதே போல கடந்த முறையும் எக்கச்சக்கமாக செலவு செய்த அவர் இரண்டு லட்சம் வாக்குகளை வாங்கி இருந்ததால், இப்போது அந்த பழைய வேலை ஒர்க் அவுட் ஆகிறது என சொல்கிறார்கள். இது போக கேஏன் நேரு, பெரம்பலூர் ராசா போன்ற முக்கிய புள்ளிகளின் செல்வாக்கு, பாரிவேந்தரின் பணபலம் என பெரம்பலூர் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே சொல்கிறார்கள்.  

இது ஒரு பக்கம் போலிக் கொண்டிருக்க,  பரம எதிரி பாமக நிற்கும் தொகுதியில், திமுக அணியில் யார் நின்றாலும் அவர்களது தேர்தல் செலவை தானே ஏற்ப்பதாகவும், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து ஜெயிக்கவைக்க தயார் என ஸ்டாலினிடம் உறுதியளித்து சேர்ந்த பாரிவேந்தர். அந்த தொகுதிகளிலும் கவனம் செலுத்துகிறாராம்.

click me!