எம்.ஜி.ஆர். இருந்தவரையிலும் கலைஞரால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுபோல, புரட்சிக்கலைஞர் கட்சி ஆரம்பித்த பிறகு, இன்று வரையிலும் சட்ட மன்ற தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறவே இல்லை என கட்சிக்காரர்களை மட்டுமல்ல அதிமுகவினரையே கன்பியூஸ் பண்ணி கைதட்ட வைத்ததுள்ளார்.
எம்.ஜி.ஆர். இருந்தவரையிலும் கலைஞரால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுபோல, புரட்சிக்கலைஞர் கட்சி ஆரம்பித்த பிறகு, இன்று வரையிலும் சட்ட மன்ற தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறவே இல்லை என கட்சிக்காரர்களை மட்டுமல்ல அதிமுகவினரையே கன்பியூஸ் பண்ணி கைதட்ட வைத்ததுள்ளார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரேமலதா பேசிய பேச்சு கூட்டணிக் கட்சியினரை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு தப்பு தப்பாக பேசியதற்கு காதைப் பிளக்கும் கைதட்டலாலே அதிர்ந்தது அரங்கம்.
எம்.ஜி.ஆர். இருந்தவரையிலும் கலைஞரால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுபோல, புரட்சிக்கலைஞர் கட்சி ஆரம்பித்த பிறகு, இன்று வரையிலும் சட்ட மன்ற தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறவே இல்லை என கட்சிக்காரர்களை மட்டுமல்ல அதிமுகவினரையே கன்பியூஸ் பண்ணி அரங்கத்தை கைதட்டலால் அதிரவைத்தார் பிரேமலதா விஜயகாந்த்.
அனால், உள்ளே இருந்த அதிமுக தமிழக அரசியலை கரைத்துக் குடித்த சில புள்ளிகள் பிரேமலதா பேசிய பேச்சை அலசி தங்களுக்குள்ளேயே பழைய மேட்டரை கிளறி கிழித்தெடுத்துள்ளனர். அதாவது விஜயகாந்த் 2005-ல்தான் கட்சி தொடங்கினார். 2006 சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களைக் கைப்பற்றி, தமிழக முதல்வரானார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை இழந்தது. 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு தேமுதிக கூட்டணி சேர்ந்ததால் எதிர்க்கட்சி தலைவரானார் விஜயகாந்த்.
கடைசியாக 2016 தேர்தலில், திமுக கூட்டணி 98 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சித் தலைவரானார் ஸ்டாலின். ஆனால் விஜயகாந்த் தான் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து இருந்த கொஞ்ச நஞ்ச ஒட்டு வங்கியையும் இழந்து நிற்கிறார்.
அதேபோல, 2009 பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 27 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பெற்றது. இந்த பழைய வரலாறெல்லாம் தெரிந்தே கன்பியூஸ் பண்ணி, கேப்டன் கட்சி ஆரம்பித்தபிறகு சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் திமுக வெற்றிபெறவே இல்லை என்று பேசி, தனது தொண்டர்களை ஏமாற்றியதைப் போல, கூட்டணிக் கட்சியினருக்கு உற்சாக மூட்டினார்.