அதிமுக - திமுகவில், வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், சீட் கிடைக்காதவர்களும், வேட்பாளர்களை பிடிக்காத நிர்வாகிகளும், உள்குத்து வேலைக்கு தயாராகி வருகின்றனர். ஆங்காங்கே முளைக்கும் அதிருப்தி கோஷ்டிகளால், வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, வாரிசு வேட்பாளர்களை வீழ்த்த, சீக்ரெட் ஸ்கெட்ச் போடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
அதிமுக - திமுகவில், வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், சீட் கிடைக்காதவர்களும், வேட்பாளர்களை பிடிக்காத நிர்வாகிகளும், உள்குத்து வேலைக்கு தயாராகி வருகின்றனர். ஆங்காங்கே முளைக்கும் அதிருப்தி கோஷ்டிகளால், வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, வாரிசு வேட்பாளர்களை வீழ்த்த, சீக்ரெட் ஸ்கெட்ச் போடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, மனு தாக்கல் துவங்கி விட்டது. தேர்தலுக்கு, ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள், அதிவேகமாக தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக மற்றும் திமுக கூட்டணி பலமாக உள்ளது. பல சிறிய கட்சிகள், தனித்து போட்டியிட்ட போதிலும், அதிமுக - திமுக கூட்டணி இடையே தான், நேரடி போட்டி உருவாகி உள்ளது.
அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்தை துவக்கி உள்ளன. கூட்டணிக்கு தலைமை தாங்கும், அதிமுக மற்றும் திமுக தலா, 20 தொகுதிகளில் களம் இறங்குகின்றன. இரண்டு கட்சிகளிலும், வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்பட்டதால் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
அதிமுகவில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன், ரவீந்திரநாத் அமைச்சர் ஜெயகுமார் மகன், ஜெயவர்தன் MLA, ராஜன் செல்லப்பா மகன், ராஜ்சத்யன் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம், தனி அணியாக இருந்தபோது, அவருடன் இருந்த பலர், சீட் கிடைக்காததால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னாள் அதிமுக - MLA, மார்கண்டேயன், சீட் கிடைக்காததால், விளாத்திகுளம் சட்டசபை இடைத்தேர்தலில், தனித்து போட்டியிடுவதாகஅறிவித்துள்ளார். ராஜ்யசபா எம்பி மைத்ரேயனும், கட்சி தலைமை மீதான கோபத்தில், கட்சி ஆபீஸ் பக்கமே வராமல் ஒதுங்கி இருக்கும் இருக்கிறார்.
அதேபோல, ராஜன் செல்லப்பா மகனுக்கு, 'சீட்' வழங்கப்பட்டது, அமைச்சர்கள் உதயகுமார், ராஜு ஆகியோரிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இப்படி அதிருப்தி அடைந்தவர்கள், உள்ளடி வேலை பார்ப்பார்கள் என தகவல்கள் கசிந்துள்ளது. திருவண்ணாமலை தொகுதியில், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்ட, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல தொகுதிகளில் இது தான் நிலவரம்.
அதே போல, திமுகவிலும் , கருணாநிதி மகள் கனிமொழி, துரைமுருகன் மகன், கதிர்ஆனந்த், முன்னாள்அமைச்சர் வீராசாமி மகன், கலாநிதி, மறைந்த மத்திய அமைச்சர் மாறன் மகன், தயாநிதி, முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன், கவுதமசிகாமணி, முன்னாள் அமைச்சர் தங்க பாண்டியனை மகன் தமிழச்சி ஆகியோருக்கு, சீட் வழங்கப்பட்டுள்ளது கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குடும்ப வாரிசுகள் அடிப்படையில் 13 பேர், தொழில் அதிபர்கள் 3 பேர், மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களில் 2 பேர், கட்சி விசுவாசிகள் 2 பேர் என திமுகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
பொன்முடி தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட செயலராக இருந்து வரும் நிலையில், அவரது மகனுக்கு, சீட் வழங்கக் கூடாது என, அம்மாவட்ட நிர்வாகிகள், திமுக தலைமைக்கு கடிதம் எழுதியும், அவருக்கு சீட் வழங்கப்பட்டிருப்பது, கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தலைமைக்கு எதிராக உள்ள திமுக தொண்டர்களுக்கு முரசொலியில் முழு நீள கட்டுரையில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், அதிமுகவைப் போலவே திமுகவிலும் வாரிசுகள் வெற்றி பெற்றால், மீண்டும், அந்த குடும்பத்தின் ஆதிக்கமே ஓங்கும் என்பதால், அவர்களை வீழ்த்த, எதிர் தரப்பினர் வியூகம் அமைத்து வருகின்றனர். இரு கட்சிகளிலும், உள்குத்து வேலை பார்க்க, பலரும் தயாராகி வரும் நிலையில், அவர்களை பணத்தால் சரி செய்யும் பணியில், வாரிசுகளின் தந்தைகள் களம் இறங்கி உள்ளனர்.
இதற்கிடையில், இதுபோன்ற அதிருப்தியாளர்களை இழுக்க, மாற்று கட்சிகள் வலை விரித்து உள்ளதால், வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற கலக்கத்தில், வாரிசுகள்உள்ளனர். வாரிசுகள் 13, விசுவாசிகள் 2!
இதுவரை ராஜ்யசபா எம்பியாக மட்டுமே தேர்வு செய்யப் பட்டு வந்த கனிமொழி முறையாக, மக்களை நேரில் சந்திக்கும், லோக்சபா தேர்தல் வேட்பாளராகி உள்ளார். திருவிடைமருதுார் தொகுதியில், 4 முறை, MLA,வாக இருந்த, ராமலிங்கம் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராகி உள்ளார்.
முன்னாள், MLA, - டி.என்.வடிவேல் கவுண்டரின் பேரன், செந்தில்குமார், தர்மபுரியிலும், ராஜபாளையம் முன்னாள், MLA, தனுஷ்கோடி மகன், குமார், தென்காசியிலும் களமிறங்குகின்றனர். இப்படி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே, மீண்டும் பதவி பெறும் வகையில், 13 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர சொந்த தொழில் செய்பவர்களும், களமிறக்கப்பட்டு உள்ளனர். பொள்ளாச்சி வேட்பாளர் சண்முகசுந்தரம், திருப்பூரில் காட்டன் நிறுவனம் நடத்தி வருபவர். கடலுார் வேட்பாளர், டிஆர்விஎஸ்.ரமேஷ், முந்திரி நிறுவன அதிபர். திருவண்ணாமலையில், கட்டுமான தொழில் அதிபரும், முன்னாள் அமைச்சர், எவ.வேலுவின் ஆதரவாளருமான, அண்ணாதுரை நிறுத்தப்பட்டு உள்ளார்.
தேமுதிக வில் இருந்து வந்த எஸ்.ஆர்.பார்த்திபன் சேலம் தொகுதி வேட்பாளராகியுள்ளார். அக்கட்சி சார்பில், 2011ல், மேட்டூர், MLA,வாக இருந்தவர். இதற்கிடையில், விசுவாசிகள் சிலருக்கும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. உதாரணமாக, காஞ்சிபுரம் வேட்பாளர், வழக்கறிஞர், ஜி.செல்வம், 1996 முதல், முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். திண்டுக்கல் வேட்பாளர் வேலுச்சாமி கட்சியின் விசுவாசி. சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.