தேனி கிராமங்களில் கணவனுக்காக ஒட்டு கேட்கும் ஓபிஆர் மனைவி... பெண்கள் படையோடு ஒட்டு வேட்டை!!

By sathish k  |  First Published Mar 25, 2019, 12:25 PM IST

தேனியில் போட்டியிடும் மகன் ஓபியாருக்காக அம்மா விஜயலட்சுமியும், கணவனுக்காக மனைவி ஆனந்தியும் கிராமம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தது தேனி அரசியல் களத்தில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.  


தேனியில் போட்டியிடும் மகன் ஓபியாருக்காக அம்மா விஜயலட்சுமியும், கணவனுக்காக மனைவி ஆனந்தியும் கிராமம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தது தேனி அரசியல் களத்தில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.  

தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நிறுத்தப்பட்டுள்ளார். முதலில் எப்படியேனும் ஜெயித்துவிடுவார் என்றே அந்த தொகுதியில் சொல்லப்பட்டது ஆனால், தற்போது அமமுக சார்பில் டஃப் பைட் கொடுக்கும் விதமாக தங்க தமிழ் செல்வமனை களமிறங்கியுள்ளார் தினகரன்.

Tap to resize

Latest Videos

இது ஒருபுறமிருக்க திமுக கூட்டணியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், நான் ஜெயலலிதாவையே பார்த்தவன் இவர்களெல்லாம் எனக்கு பிசுக்கோத்து என சொல்லியே களமிறங்கியுள்ளார்.

களத்தில் போட்டி பலமாக இருப்பதாலும், தனது அப்பா முதல்வராக இருந்தவர், துணைமுதல்வராக இருப்பவர் நாம் தோற்றால் மொத்தமாக சரிவை சந்திக்க நேரிடும் என்பதால் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் பிரசாரம் செய்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில், அவரது மனைவி அவரது ஆனந்தி, அம்மா விஜயலட்சுமி அவருக்காக தேனியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவங்க மட்டுமல்ல ஓபிஎஸ்ஸின் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜாவின் மருமகள் ஐஸ்வர்யா, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மயில்வேலின் மனைவி ஆகியோர்  தேனி கிராமங்களுக்கு  சென்றனர். அவர்களுடன் 200க்கும் மேற்பட்ட அதிமுக மகளிர் அணியினரும் சென்றனர். அவர்கள் வீடு வீடாக சென்று ரவீந்திரநாத்குமாருக்கு ஓட்டு போடுமாறு கிராம மக்களிடம் வாக்கு சேகரித்தனர். 

click me!