அந்தமானில் கூட்டணி... மம்தாவைச் சந்தித்து ஒப்பந்தம் போட்ட கமல்ஹாசன் !!

By sathish kFirst Published Mar 26, 2019, 10:42 AM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்த பின், திருணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்த பின், திருணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கடந்த ஒரு வருடமாக கட்சியை நடத்தி வருகிறார்.  வரும் மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசுக் கட்சியுடன் கூட்டணி அமைத்துச் சந்திக்கவுள்ளது. கோவையில் நேற்று முன்தினம் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த கமல், தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடப்போகிறேன் என்றும் தெரிவித்திருந்தார். அதே நேரம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினையும் விமர்சிக்க தவறவில்லை.

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில், ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 60 லட்சம் குடும்பங்களின் வறுமையை அகற்றுதல், குடிசை இல்லா தமிழகம், ஆண்களுக்கு இணையான ஊதியத்தைப் பெண்களுக்குப் பெற்றுத் தருவது உள்ளிட்ட  பல்வேறு அம்சங்கள் நிறைந்திருந்தன.

தேர்தல் பரபரப்புக்கு இடையே கொல்கத்தாவுக்கு நேற்று சென்ற கமல்ஹாசன், அங்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஹவுராவிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது தேர்தல் நிலவரங்கள் குறித்தும் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்குப் பிறகு  செய்தியாளர்களை சந்தித்த அவர்;“மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. அந்தமானில் திருணமூல் காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கூட்டணியானது வரும்காலத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன். 

மேலும், அந்தமானில் திருணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!