ஸ்டாலினுக்கு சம்மட்டி அடி கொடுத்த டிடிவி தினகரன்!! அரசியல்வாதிக்கு எதுக்கு மதம் என கேள்வி

By sathish kFirst Published Apr 11, 2019, 10:42 AM IST
Highlights

திமுக தலைவர் ஸ்டாலின் என்னவோ தங்கள் வீட்டுப் பெண்கள் கோயிலுக்கு சென்று வருவதை சந்திர மண்டலத்துக்குசென்று வருவது போல் பேசுகிறார்.  அரசியல்வாதிகள் சாதி, மதங்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய தினகரன், ஸ்டாலின் போலவே மிமிக்கிரி செய்து பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் என்னவோ தங்கள் வீட்டுப் பெண்கள் கோயிலுக்கு சென்று வருவதை சந்திர மண்டலத்துக்குசென்று வருவது போல் பேசுகிறார்.  அரசியல்வாதிகள் சாதி, மதங்களை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய தினகரன், ஸ்டாலின் போலவே மிமிக்கிரி செய்து பேசினார்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் தினகரன் நாடாளுமன்ற வேட்பாளர் முருகேசன் மற்றும் சட்டமன்ற வேட்பாளர் ரங்கசாமி அதேபோல திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காமராஜ் மற்றும் நாகை நாடாளுமன்றதொகுதி வேட்பாளர் செங்கொடி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய தினகரன், பா.ஜ.கவை போல திமுகவும், மத‌த்தை பற்றி பேசுவதாக குற்றம்சாட்டினார்.

சிறுபான்மையினர் எங்களுக்கு நண்பர்கள் என்று கூறும் ஸ்டாலினுக்கு பெரும்பான்மையினர் பிடிக்காதா என கேள்வி எழுப்பிய டி.டிவி. தினகரன், அரசியல்வாதிக்கு  எதுக்கு மதம் என கிண்டல் செய்தார்.

தஞ்சை மக்களவைத் தொகுதி வேட்பாளர் பொன் முருகேசனை ஆதரித்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் அமமுக துணைப் பொதுச்  செயலாளர் தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்கு கூடியிருக்கும் தொண்டர்களைப் பார்த்தால் வேளாண்மைக் கடலே இங்கு வந்துவிட்டது போல் உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாம் அனைவரும் எதிர்பார்த்த தேர்தல் வந்துவிட்டது. இந்த தேர்தலோடு மத்தியில் மோடியும், தமிகத்தில் டாடியும் வீட்டுக்கு போய் விடுவார்கள் என தெரிவித்தார். அதுவும் எடப்பாடியும், ஓபிஎஸ்ம் தங்களது பழைய் தொழிலை பார்க்க சென்று விடுவார்கள் என கூறினார்.

தஞ்சை மாவட்டத்தை கஜா புயல் தாக்கியபோது  இபிஎஸ், ஓபிஎஸ் எங்கே போனார்கள் என கேள்வி எழுப்பிய தினகரன், மோடி இந்தப் பக்கம் வந்து எட்டிப் பார்த்தாரா என என கேட்டார். மோடிக்கு நம் மீது கடும் கோபம். ஏன் தெரியுமா ? கடந்த தேர்தலில் அம்மா மோடியைப் பார்த்து மோடியா அல்லது இந்த லேடியா ? என சவால் விட்டார், அப்போதிருந்தே நம் மீது அவருக்கு கோபம் தான் என கூறினார்.

தொடர்ந்து திமுக கூட்டணி குறித்து பேசும்போது, 5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக தமிழக மக்களுக்கு என்ன செய்தது ? என கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் போகும் இடமெல்லாம் நான் சிறுபான்மை மக்களுக்கு நண்பர் என கூறி வருகிறார். அப்படி என்றால் அவருக்கு பெரும்பான்மை மக்களைப் பிடிக்காதா என்று குறிப்பிட்டார்.

அரசியல்வாதிக்கு எதுக்கு  மதம்? என கேட்ட தினகரன் அவர்கள் வீட்டுக்குள் பட்டை அடித்துக் கொள்வார்கள், வெளியே வரும்போது அதை அழித்துவிட்டு வருவார்கள் என கிண்டல் செய்தார்.

அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் ஒரு பேப்பரை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதற்கு குதித்த ஸ்டாலின், தற்போது துரை முருகன் விட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு என்ன சொல்லப் போகிறார் என கலாய்த்தார். திமுக தலைவர் ஸ்டாலின் போல அவர் பேசிக்காட்டியதால் தொண்டர்கள் பலத்த கரகோஷத்துடன் ஆரவாரம் செய்தனர்.   

click me!