இனி துரோகம் பண்ணணும்ன்ற எண்ணமே வரக்கூடாது... அலறவிடப்போகும் தினகரன். சிதறும் பீதியில் ஓபிஎஸ்!!

By sathish k  |  First Published Mar 18, 2019, 8:46 PM IST

தேனி பாராளுமன்ற தொகுதி துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ஒப்பிலார் களமிறங்கி இருப்பதால் ஸ்டார்  தொகுதியாக மாறிவிட்டது.  அதற்கும் மேலாக ஓபிஎஸ் மகனை தோற்கடிக்க பல்வேறு யுக்திகளின் கையாள இருக்கிறாராம் தினகரன்.


தேனி பாராளுமன்ற தொகுதி துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ஒப்பிலார் களமிறங்கி இருப்பதால் ஸ்டார்  தொகுதியாக மாறிவிட்டது.  அதற்கும் மேலாக ஓபிஎஸ் மகனை தோற்கடிக்க பல்வேறு யுக்திகளின் கையாள இருக்கிறாராம் தினகரன்.

இந்த தேனி பாராளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர் பிரிவில் உள்ள பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் தான் பெரும்பான்மையானோர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மறவர், நாயக்கர், கவுண்டர், செட்டியார், நாடார் உள்பட சில சமூகத்தினருடன் கிறிஸ்தவர், முஸ்லீம் மக்களும் கனிசமாக வாழ்ந்து வருகிறார்கள். 

Tap to resize

Latest Videos

கடந்த தேர்தலின் போது ஜெ.விடம் ரவீந்திரநாத்துக்கு ஓபிஎஸ். சீட் கேட்டார். ஆனால் ஜெவோ ஓபிஎஸ்யின் ஆதரவாளரான பார்த்திபனுக்கு சீட்  கொடுத்தார். ஆனாலும் அம்மா அச்சொல்லிவிட்டாரே என்பதால்  பார்த்திபனுக்கு செலவு பண்ணி ஜெயிக்க வைத்தார் ஓபிஎஸ். 


 
தற்போது ஜெயலலிதா இல்லாததாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.சே இருப்பதால் தனது மகன் ரவீந்திரநாத்திற்கு சீட் கொடுத்து இருக்கிறார். அதைக்கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் சமூகத்தினர் மட்டுமே உற்சாகத்தில் உள்ளனர் ஆனால், ராஜன் செல்லப்பா மற்றும் செல்லூர் ராஜு டீம் பயங்கர அப்செட்டாம்.   ராஜன் செல்லப்பா தன் மகனும் அதிமுக ஐடி விங் செயலாளருமான ராஜ் சத்யனுக்கு மதுரை தொகுதிக்கு முயற்சித்தார். ஏற்கனவே ராஜன் செல்லப்பாவுக்கும், உதயகுமாருக்கும் ஏழாம் பொருத்தம். அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மதுரையில் தங்களை ஓரங்கட்டி அரசியல் செய்கிறார் உதயகுமார் என்றும் தற்போது மீண்டும் ஓபிஎஸ் மகன் மூலம் தங்களை டம்மியாக்க முயல்வதாக ராஜன் செல்லப்பா கேங் கடுப்பில் இருக்கிறார்களாம்.

இந்நிலையில், கடந்த 2004ல் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் தினகரன் . அதன்பின் 2009ல் ஆண்டிபட்டி தங்கம் போட்டியிட்டும் தோல்வியை தழுவினார். இத்தொகுதியில் தங்கள் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்தும் கூட தங்கள் தோல்விக்கு ஓபிஎஸ். தான் காரணம். ஓபிஎஸ். ஆதரவாளர்கள் ஓட்டு போடாததால் தினகரன்,  நானும் தோற்றேன் என ஆண்டிபட்டி தங்கமோ ஓபன் ஸ்டேட்மென்ட்.  

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், தனது  சமுதாய வாக்கு வங்கி இருக்கும் தைரியத்தில் தன் மகன் ரவீந்திரநாத்தை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார். இதற்காக தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் பொறுப்புகளை வழங்கியுள்ளார். ஆனால் தினகரனோ இனி ஓபிஎஸ்க்கு யாருக்கும் துரோகம் பண்ணணும்ங்கிற எண்ணமே வரக்கூடாது. நாம ஜெயிக்கலானாலும் பரவால்ல, ஓபிஎஸ் மகனுக்கு முக்கிய சில இடங்களில் விழும் வாக்குகளும், அதிருப்தியில் உள்ளவர்களை எதிராக திருப்பி விடவும் பிளான் போட்டுள்ள அவர்,  அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைராஜின் மகன் தனசேகரனை களத்தில் இறக்க உள்ளார். தினகரனின் இந்த பக்கா பிளானால்  ஓட்டுக்கள் சிதற போகிறது என்ற பீதியில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ். 

click me!