டேன்ஸ் டீச்சருடன் அறைக்குள் கதவை மூடிக்கொண்ட ஜாகீர் உசேன்.. அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. பயங்கர புகார்.

By Ezhilarasan BabuFirst Published Apr 2, 2022, 2:26 PM IST
Highlights

பிப்ரவரி 28 அன்று கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார். அப்போது என்னை மட்டும் தலைமை ஆசிரியை அறைக்கு உள்ளே வர சொல்லி அழைத்து கதவை மூடினார்.

நடன ஆசிரியை அறைக்குள் அழைத்து அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பரதநாட்டிய கலைஞர் ஜாகீர்உசேன் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இசை பள்ளி ஆசிரியை கலை பண்பாட்டு துறை இயக்குநருக்கு பரபரப்பு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன். இவர் பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்து வருகிறார். பிறப்பால் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு இந்து தாயால் வளர்க்கப்பட்டவர் ஜாகிர் உசேன். கடந்த 30 ஆண்டுகளாக பரத நாட்டிய கலைஞராகவும் வைணவ சொற்பொழிவாளராகவும் இருந்துவருகிறார். இவருக்கு இந்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, அதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைமாமணி விருது, நாட்டிய செல்வன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்குள் செல்ல முயன்ற இவரை ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தடுத்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தமிழ்நாடு கலை பண்பாடு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடிக்கடி இசை பள்ளிகளுக்கு ஜாகீர் உசேன் ஆய்வு மேற்கொண்டும் வருகிறார். அச்சமயத்தில் தான் அவர்  இசை மற்றும் நடன ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக  பாதிக்கப்பட்டதாக கூறி கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியை கலை பண்பாட்டு துறை இயக்குனர் அவர்களுக்கு ஜாகிர் உசேன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் ஒரு பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர், அரசு இசைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்,  பிப்ரவரி 28 அன்று கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன் எங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வந்தார். அப்போது என்னை மட்டும் தலைமை ஆசிரியை அறைக்கு உள்ளே வர சொல்லி அழைத்து கதவை மூடினார்.

அங்கு என் தோள்பட்டை மேல் கை வைத்து இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து இப்படித்தான்  நடனமாட வேண்டும் என சொல்லி மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டார்.  ஏப்ரல் மாதம் மூன்று நாள் பயிலரங்கம் நடத்த போகிறேன், அங்கு உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும் என கூறி ஆசிரியைகளை தரக்குறைவாகப் பேசினார். இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது, தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணினேன் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் சிவகங்கை மாவட்ட இசைப்பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போதும் ஆசிரியையிடம் ஜாகீர்உசேன் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது அடுத்தடுத்து புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

click me!