கள்ளக்காதலனுடன் உல்லாசம்..கண்டித்த கணவர்..ஆத்திரத்தில் மனைவி செய்த விபரீதம் சம்பவம் !

Published : Apr 02, 2022, 01:02 PM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசம்..கண்டித்த கணவர்..ஆத்திரத்தில் மனைவி செய்த விபரீதம் சம்பவம் !

சுருக்கம்

ஷீத்தலுக்கு, நரேஷ் போதானி என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இதை அறிந்த அவரது கணவர் தினேஷ் பஞ்சால் மனைவி ஷீத்தலை  கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த நபருடன் பழகிவந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்தது. 

கள்ளக்காதல் விவகாரம் :

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த நபர் கோபட் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பஞ்சால் என்பது தெரியவந்தது. இவரது மனைவி பெயர் ஷீத்தல் ஆகும். 

போலீசார் இவரது மனைவியை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஷீத்தலுக்கு, நரேஷ் போதானி என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இதை அறிந்த அவரது கணவர் தினேஷ் பஞ்சால் மனைவி ஷீத்தலை  கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த நபருடன் பழகிவந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்தது. 

கணவரை கொலை செய்த மனைவி :

ஒருகட்டத்தில் இந்த உறவுக்கு இடையே பிரச்சனையாக இருக்கும் கணவரை கொன்றுவிட்டால், என்ன ? என்று யோசித்து தனது திட்டத்தால் நரேஷ் போதானிக்கு கூறியிருக்கிறார். இதையடுத்து கணவனை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். பிறகு நரேஷ் போதானி தனது நண்பர்களான அஜய் மாதேரா, சதீஷ் ஹவ்சரே, ராகேஷ் ஆகியோருடன் திட்டம் தீட்டி,  தினேஷ் பஞ்சாலை கொலை செய்து உடலை வீசிச் சென்றனர். 

இந்த தகவல் எல்லாம் போலீசார்  விசாரணையில் தெரியவந்தது. பின்னர் மனைவி ஷீத்தல், நரேஷ் போதானி மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க : சுகத்துக்கு ஆசைப்பட்ட தாய்.. 11 ஆண்டுகள் 'காம' கொடூரத்தை அனுபவித்த சிறுமி.. தாய்மாமன் வெறிச்செயல் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!