நள்ளிரவில் ஓசி குடிக்கு பொண்டாட்டியை அழைத்து சென்ற கணவன்... சரக்கு மப்பில் அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...

Published : Aug 25, 2019, 12:12 PM ISTUpdated : Aug 25, 2019, 12:18 PM IST
நள்ளிரவில் ஓசி குடிக்கு பொண்டாட்டியை அழைத்து சென்ற கணவன்... சரக்கு மப்பில் அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...

சுருக்கம்

ஓசி குடிக்காக மனைவியை பப்புக்கு அழைத்து வந்த கணவன் , மனைவியின் தகாத செயலை கண்டித்ததால், இருவருக்குள் தகராறு ஏற்பட்டு ரோட்டில் அடித்துக் கொண்டு சண்டை போட்ட சம்பவம் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓசி குடிக்காக மனைவியை பப்புக்கு அழைத்து வந்த கணவன் , மனைவியின் தகாத செயலை கண்டித்ததால், இருவருக்குள் தகராறு ஏற்பட்டு ரோட்டில் அடித்துக் கொண்டு சண்டை போட்ட சம்பவம் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பீமாஸ் நட்சத்திர ஓட்டல் பப்பில் பெண்களுக்கு ஓசியில் சரக்கு வாங்கி கொடுப்பதால், மனைவி மற்றும் நண்பர்களுடன் அளவுக்கதிகமாக சரக்கு அடித்துவிட்டு, நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சினிமா நடனக் கலைஞர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று  விசாரித்து வருகின்றனர். சென்னை வடபழனி பீமாஸ் பிளஸ் நட்சத்திர ஓட்டலில் பார் நடத்த மட்டும் அனுமதி உள்ள நிலையில், அதனுடன் இணைந்த பப் ஒன்று அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இங்கு சரக்கு அடிக்க செல்லும் பெண்களுக்கு சரக்கு இலவசம் என்பதால் இளசுகள் தங்கள் காதலிகளையும், தோழிகளையும், பாருக்கு அழைத்துச் செல்வது வழக்கமான ஒன்றாக மாறிவருவதற்கு மப்பில் தள்ளாடியபடியே நிற்கும் இந்த ஜோடிகளே போதும், சனிக்கிழமை இரவு வண்ண விளக்குகள் ஜொலிக்க சரக்கு மப்பில் ஆண்களும் பெண்களும் உற்சாக டான்ஸ் ஆடி பொழுதை கழிக்கின்றனர். ஜோடியாக வந்தால் மட்டுமே அனுமதி என்ற விதிமுறை உள்ளதால், பெண்கள் இல்லாமல் ஆண்கள் தனியாக உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், திருநகரை சேந்த சினிமா நடனக் கலைஞரான ஹேமந்த் தனது இளம் மனைவி மற்றும் 4 நண்பர்களுடன் இந்த பப்புக்குள் சரக்கு அடிக்க சென்றுள்ளார். அங்கு ஓசியில் அளவுக்கு அதிகமாக சரக்கு அடித்த அவரது மனைவிக்கு மப்பு தலைக்கேறியது.

அப்போது எல்லை மீறி கட்டிப்பிடித்து அரைகுறை ஆடையில் ஆண்களுடன் சேர்ந்து ஆபாச நடனம் ஆடியதால், கடுப்பான கணவன் மனைவியை திட்டியுள்ளார் அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பப்புக்குள் கைகலப்பில் ஈடுபட்ட அவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் சண்டையிட்டுக் கொண்டே ஓட்டலுக்கு வெளியே சாலையில் வந்து கட்டிப்புரண்டு சண்டையிட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து சுமார் அரைமணி நேரத்திற்கு மேல் ஸ்தம்பித்தது.

ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து தப்பி அந்த பெண், அருகில் உள்ள கடை ஒன்றில் பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்தார். இதனால் அந்த கடைக்காரரை, குடிகார நண்பர்களுடன் சேர்ந்து ஹேமந்த்குமார் புரட்டி எடுத்துள்ளார். கடைக்காரருக்கு ஆதரவாக அருகில் இருந்த வியாபாரிகளும் பொதுமக்களும் சேர்ந்து குடிகார நடனக் கலைஞர்களை வெளுத்துக்கட்ட அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், சரக்கு போதையில் ரகளையில் ஈடுபட்ட ஹேமந்த், அவரது நண்பர்கள் 4 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த களேபரத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஹேமந்த்குமாரின் மனைவி, கூட்டத்திற்குள் புகுந்து தப்பிச் சென்று விட்டார். மூக்கு முட்ட ஓசி குடி குடித்துவிட்டு இவர்கள் செய்த அடாவடியால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.  

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!