கல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி!!

Published : Aug 24, 2019, 06:09 PM IST
கல்யாணமான 40 நாளில் மருத்துவ மாணவிக்கு பரிதாபம்... காலேஜ் ஹாஸ்டலில் அதிகாலையில் பெரும் அதிர்ச்சி!!

சுருக்கம்

கல்லூரிகளில் மாணவ மாணவிகள் தற்கொலை என்பது தற்போது அதிகரித்து வரும் நிலையில் தற்போது திருச்சி அரசு மருத்துவகல்லூரியில் எம்.எஸ்.படிக்கும் மாணவி கல்லூரி ஹாஸ்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்தவர் தென்னிவளவன் மகள் கயல்விழி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.எஸ் படித்து வந்தார். மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் தான் கல்யாணம் நடந்திருக்கிறது. இவரது கணவர் சக்தி கணேஷ் சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்எஸ் படித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை காலை மாணவி கயல்விழி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹாஸ்டலில் இருந்த சக மாணவிகள் எழுந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஹாஸ்டலுக்கு விரைந்து வந்த போலீஸ், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த கயல்விழியின் உறவினர்கள் கயல்விழியின் உடலில் காயங்கள் இருப்பதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர்கள் கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். 

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!