கடனை கட்ட தவறிய வாலிபர்... பைக்கில் கட்டி 2 கி.மீ தூரம் இழுத்து சென்ற கொடூரம்... வீடியோ வைரல்!!

Published : Oct 17, 2022, 04:59 PM ISTUpdated : Oct 17, 2022, 05:00 PM IST
கடனை கட்ட தவறிய வாலிபர்... பைக்கில் கட்டி 2 கி.மீ தூரம் இழுத்து சென்ற கொடூரம்... வீடியோ வைரல்!!

சுருக்கம்

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கடன் வாங்கிய தொகையை செலுத்தாததால் இளைஞர் ஒருவர் பைக்கில் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கடன் வாங்கிய தொகையை செலுத்தாததால் இளைஞர் ஒருவர் பைக்கில் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக பைக்கில் இழுத்து செல்லப்பட்ட நபர், போதைப்பொருள் (கஞ்சா) வாங்குவதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு கடனாக 10,000 ரூபாயை பெற்றுள்ளார். அதனை திருப்பித் தராததால், கடன் கொடுத்த இரண்டு பேர் தங்களது பைக்கில் கடன் வாங்கிய இளைஞரை கட்டிப்போட்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: நடிகர் சல்மான் கான் போதைமருந்து அடிமை, ஷாருக்கான், அமீர் கான்! யோகா குரு ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. இளைஞர் இவ்வாறு இழுத்து செல்லப்படுவதை தட்டிக்கேட்ட உள்ளூர்வாசிகளை பைக்கில் சென்றவர்கள் கூர்மையான ஆயுதத்தைக் காட்டி மிரட்டினர். பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் பைக்கில் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை.. SSC மூலம் நிரப்படப்படவுள்ள 73 ஆயிரம் இடங்கள்.. விவரம்

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கட்டாக்கின் சுதாஹாட் பகுதியைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை லால்பாக் போலீசார் கைது செய்து அவர்களின் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், இளைஞர்கள் இழுத்துச் செல்லப்பட்ட பாதையில் மூன்று போக்குவரத்து புறக்காவல் நிலையங்கள் இருந்தும் மர்ம நபர்களை எந்த போலீஸாரும் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!