அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... அம்பலமானது பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published May 8, 2019, 5:00 PM IST
Highlights

திருச்சியில் அமமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சியில் அமமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காதர் உசேன், ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் ஜாவித் உசேன் (24). இவர் அ.ம.மு.க.வில் பொன்மலை பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்தார். நேற்று மாலை 6 மணி அளவில் ஜாவித் உசேன் அங்குள்ள கோழி இறைச்சிக்கடையில் இறைச்சி வாங்க சென்றார். இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று ஜாவித் உசேனை தாக்கினர்.

உயிருக்கு பயந்து அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த ஜாவித்தை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தார். இதனையடுத்து மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜாவித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வந்தனர்.

பின்னர், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பிளஸ்-1 மாணவியின் சகோதரன், அவரின் நண்பர் என தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்து வந்த மாணவியின் சகோதரன் கமலக்கண்ணன் மற்றும் அவரது நண்பரான சரவணக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!