இளைஞர் தலைத்துண்டித்து கொடூர கொலை.. பாஜக நிர்வாகி உட்பட 5 பேர் கோர்ட்டில் சரண்..!

By vinoth kumarFirst Published Nov 17, 2021, 6:11 PM IST
Highlights

இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல்  திடீரென குமரேசனை வழி மறித்தனர். இதனையடுத்து, குமரேசன் சரமாரியாக வெடிடினர். இதில், சம்பவ இடத்திலேயே குமரேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், அந்த கும்பல் குமரேசனின் தலையை துண்டித்து எடுத்து சென்றது. 

திருவாரூரில் இளைஞல் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் அகரதிருநல்லூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் குமரேசன் (35). இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரணியன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குமரேசன் இருசக்கர வாகனத்தில் உறவினர் சுசீலா என்பவருடன் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு அரிசி மூட்டையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்தார். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல்  திடீரென குமரேசனை வழி மறித்தனர். இதனையடுத்து, குமரேசன் சரமாரியாக வெடிடினர். இதில், சம்பவ இடத்திலேயே குமரேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், அந்த கும்பல் குமரேசனின் தலையை துண்டித்து எடுத்து சென்றது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குமரேசன் கொலை செய்யப்பட்டதை அறிந்து அரசு மருத்துவமனை முன்பு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தி வைத்திருந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் நேரில் பார்த்த உறவினர் பெண் சுசீலாவிடம் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், குமரேசன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று குமரேசனை கொலை செய்ததாக கூறி பாஜக இளைஞரணி ஒன்றிய தலைவர் உட்பட 5 பேர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்த 5 நபர்களையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

click me!