சென்னையில் பயங்கரம்.. தலை, கைகள் இல்லாத நிலையில் வாலிபர் படுகொலை.. குப்பை மெட்டில் எரிந்து கொண்டிருந்த சடலம்.!

Published : May 26, 2022, 08:18 AM IST
சென்னையில் பயங்கரம்.. தலை, கைகள் இல்லாத நிலையில் வாலிபர் படுகொலை.. குப்பை மெட்டில் எரிந்து கொண்டிருந்த சடலம்.!

சுருக்கம்

கொலை செய்யப்பட்டவரின் தலை மற்றும் 2 கைகளும் அங்கு இல்லை. போலீசார் குப்பை கிடங்கில் தேடியும் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. மர்மகும்பல் அவரை கொடூரமாக தலை, கைகளை வெட்டி கொலை செய்து உள்ளனர்.

பூந்தமல்லி அருகே குப்பை மேட்டில் தலை, கைகள் துண்டிக்கப்பட்டு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில் இருந்து கண்ணபாளையம் செல்லும் சாலையில் குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் அவ்வப்போது குப்பைகள் தீப்பிடித்து எரிவது வழக்கம். இந்நிலையில், குப்பைக் கிடங்கு அருகே நேற்று காலை தலை மற்றும் 2 கைகள் துண்டிக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய 3 காவல்நிலைய போலீசாரும் வந்தனர். சம்பவம் நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் வரும் என்பதில் போலீசாருக்கிடையே குழப்பம் ஏற்பட்டது. இதில், பூந்தமல்லி, திருவேற்காடு இரு காவல்நிலைய போலீசாரிடையே எல்லைப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இரு போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் எரிக்கப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவரின் தலை மற்றும் 2 கைகளும் அங்கு இல்லை. போலீசார் குப்பை கிடங்கில் தேடியும் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. மர்மகும்பல் அவரை கொடூரமாக தலை, கைகளை வெட்டி கொலை செய்து உள்ளனர். எரித்து கொல்லபட்ட நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? வேறு எங்காது கொலை செய்துவிட்டு குப்பை மேட்டில் சடலத்தை எரித்து சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- செடி புதருக்குள் இருந்து வரும் முனங்கல் சத்தம்... காதலர்களுக்கு படுக்கை அறையாக மாறிய வண்டலூர் பூங்கா..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!