தன்னுடன் டிக்டாக் செய்த நண்பன் கொன்று தற்கொலை... வீடியோ வெளியிட்டதால் விபரீதம்..!

Published : Jul 03, 2019, 10:57 AM IST
தன்னுடன் டிக்டாக் செய்த நண்பன் கொன்று தற்கொலை... வீடியோ வெளியிட்டதால் விபரீதம்..!

சுருக்கம்

திருத்தணி அருகே டிக்டாக் விபரீதத்தால் நண்பனை கொன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே டிக்டாக் விபரீதத்தால் நண்பனை கொன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் கிராமம் அருகே, ஏரிக்கரையின் ஓடையில், 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த செய்வாய்கிழமையன்று, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, இறந்த வாலிபர் அருகில், பூச்சி மருந்து பாட்டில் மற்றும் இருசக்கர வாகனம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து, போலீசார் இருசக்கர வாகனத்தை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்த இளைஞர், திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் 28 வயதான வெங்கடராமன் என தெரிய வந்தது. வெங்கடராமன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி, நண்பர் விஜி என்பவருடன் ஒன்றாகச் சேர்ந்து, 'டிக் டாக்' வீடியோவில், தாழவேடு காலனி மக்களை அவதூறாக பேசி, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனால் காலனி மக்கள், சாலை மறியல் செய்ததை தொடர்ந்து, வெங்கடராமன், விஜி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி இரவு விஜியை கழுத்தை நெரித்து கொலை செய்து, வெங்கடராமன் போலீசில் சரணடைந்ததாகத் தெரிகிறது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த வெங்கடராமன் மீது, கொலை வழக்கு, 'டிக் டாக்' அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனால், தனக்கு, அதிக ஆண்டு தண்டனை கிடைக்கும் என்பதால், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

PREV
click me!

Recommended Stories

கலகலப்பு பட பாணியில் திருட்டு.. ஃபேன் ஓட்டையில் சிக்கி தலைகீழாக தொங்கிய இளைஞர்!
அட பாவிங்களா.! இதுக்குலாமா கொலை செய்வாங்க! வியாபாரியை காரில் கடத்தி குற்றாலத்தில் கதறவிட்டு கதையை முடித்த பயங்கரம்