மனைவியுடன் சேர்ந்து கள்ளக்காதலியை லாட்ஜில் வைத்து கொலை செய்த கணவர்..!

Published : Jul 02, 2019, 06:32 PM IST
மனைவியுடன் சேர்ந்து கள்ளக்காதலியை லாட்ஜில் வைத்து கொலை செய்த கணவர்..!

சுருக்கம்

பணம் கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலியை லாட்ஜில் வைத்து கொலை செய்து விட்டு மனைவியுடன் தப்பி சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பணம் கேட்டு தொந்தரவு செய்த கள்ளக்காதலியை லாட்ஜில் வைத்து கொலை செய்து விட்டு மனைவியுடன் தப்பி சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் வசித்து வருபவர் அருளானந்தம். இவரின் மனைவி சுமதி. இவர் கடந்த 25-ம் தேதி தனது மனைவி சுமதி மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் வேளாங்கண்ணியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். 27-ம் தேதி அறை நீண்ட நேரம் பூட்டுக்கிடந்ததால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது அவருடன் வந்த அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அருணானந்தத்திற்கும், கவிதாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைப்பயன்படுத்தி அருளானந்தத்திடம் கவிதா அடிக்கடி பணம் வாங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்துள்ளார். இதனால், அருளானந்தம் விரக்தி அடைந்தார்.  

இதைத்தொடர்ந்து கவிதாவுடனான உறவையும், அவர் பணம் கேட்டு மிரட்டுவதையும் மனைவி சுமதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து கவிதாவை கொலை செய்து தப்பித்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். பின்னர், சுமதி மட்டும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அருளானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
கலகலப்பு பட பாணியில் திருட்டு.. ஃபேன் ஓட்டையில் சிக்கி தலைகீழாக தொங்கிய இளைஞர்!