கணவரின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கள்ளக்காதலன்..!

Published : Jul 02, 2019, 05:59 PM IST
கணவரின் கண்முன்னே மனைவியை கொலை செய்த கள்ளக்காதலன்..!

சுருக்கம்

ராஜபாளையம் அருகே கணவரின் கண்முன்னால் கள்ளக்காதலனால் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே கணவரின் கண்முன்னால் கள்ளக்காதலனால் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பூமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிக்குமார் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை பூமாரி வீட்டிற்கு மாரிக்குமார் சென்றுள்ளார். கணவர் வீட்டில் இருந்த நிலையில் மாரிக்குமாரை வீட்டை வெளியே செல்லுமாறு பூமாரி கேட்டுள்ளார். 

அதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட மாரிக்குமார் பூமாரையை தாக்கி கீழே தள்ளியுள்ளார். தொடர்ந்து கணவர் கண்முன்னாலே அவரை அடித்து கொலை செய்துவிட்டு மாரிக்குமார் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனையடுத்து கணவர் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரிக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவர் கண்முன்னால் கள்ளக்காதலனால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!