தங்கையின் காதலனை பீர் பாட்டிலால் சதக் சதக் குத்திய கொடூர அண்ணன்..!

Published : Jul 02, 2019, 04:50 PM ISTUpdated : Jul 02, 2019, 04:51 PM IST
தங்கையின் காதலனை பீர் பாட்டிலால் சதக் சதக் குத்திய கொடூர அண்ணன்..!

சுருக்கம்

திருச்சியில் தங்கையின் காதலனை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தங்கையின் அண்ணணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் தங்கையின் காதலனை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தங்கையின் அண்ணணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பெல்ஸ் கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து, ராஜேஸ்வரி தனது மகன் சத்யநாராயணனுடன் தனிவீட்டில் வசித்து வந்தார். மகன் சத்யநாராயணன் (30) தனியார் ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், பாலக்கரை பசுமடம் பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் சந்தியாகு. இவருக்கு ஹென்றி வினோத் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் உள்ளனர். சத்திய நாராயணனுக்கும், கல்லூரி மாணவியான நிவேதாவும் (19) கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த நிவேதாவின் அண்ணன், பலமுறை சத்திய நாராயணனை மிரட்டியுள்ளார். அதேபோல், தங்கை நிவேதாவை காதலிப்பதை விட்டுவிடுமாறு பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். 

இதனால் கடும் ஆத்திரமடைந்த வினோத் நேற்று இரவு 10 மணியளவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது. அவ்வழியாக வந்த சத்தியநாராயணிடம் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த வினோத், பீர் பாட்டிலால் சத்திய நாராயணன் தலையில் மற்றும் வயிற்றில் குத்தியுள்ளார். 

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சத்திய நாராயணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சத்திய நாராயணன் பாதி வழிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
கலகலப்பு பட பாணியில் திருட்டு.. ஃபேன் ஓட்டையில் சிக்கி தலைகீழாக தொங்கிய இளைஞர்!