மதுரையில் தலை நசுங்கிய நிலையில் பிரபல ரவுடி கொடூரக் கொலை..!

Published : Jul 02, 2019, 01:35 PM IST
மதுரையில் தலை நசுங்கிய நிலையில் பிரபல ரவுடி கொடூரக் கொலை..!

சுருக்கம்

மதுரையில் பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மதுரையில் பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

மதுரை மாவட்டம், செல்லூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மீது வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், நேற்று இரவு செல்லூர் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து சதீஷ்குமாரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். 

இந்நிலையில், அவ்வழியாக சென்ற ஒருவர் தலை நசுங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தற்கொ**லை முடிவுக்கு யார் காரணம்? படிக்க தெரியாத பஞ்சம்மாள் பேத்தி உதவியுடன் சுவரில் எழுதிய பகீர் தகவல்
தம்பி சமாதியில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.! அண்ணனை அலேக்கா தூக்கிய போலீஸ்.!