சென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை..!

Published : Apr 26, 2022, 12:09 PM IST
சென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி படுகொலை..!

சுருக்கம்

சென்னை அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் பட்டப்பகலில் கார்த்திக் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகராறு

சென்னை அம்பத்தூர் சிவானந்தம் நகரை சேர்ந்த லோகேஷ் என்ற கார்த்திக்கும் அவரது தம்பி வெங்கடேஷ் இருவரும் அம்பத்தூர் வானகரம் நெடுஞ்சாலையில் கலைவாணர் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு வந்த கும்பல் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளது. இதன் பின்னர் கார்த்திக்கும், வெங்கடேசும் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த போது அதே கும்பல் இருவரையும் தாக்கியுள்ளது. 

ஓட ஓட விரட்டி படுகொலை

அப்போது, வெங்கடேஷ் தப்பியோடிவிடவே கார்த்திக்கை அந்த ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

10 பேரிடம் விசாரணை

இந்த கொலை தொடர்பாக போலீசார் 17 வயது சிறார் உட்பட 10 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?