17 வயது கல்லூரி மாணவியான இவருடன் தினேஷ் பழகி வந்துள்ளார். நெருங்கி பழகிய இருவரும் நாளைடைவில் காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தினேஷ் தனிமையில் இருந்ததாகவும் அதை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவி, தினேஷ் உடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருக்கும் உடன்குடியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது கல்லூரி மாணவியான இவருடன் தினேஷ் பழகி வந்துள்ளார். நெருங்கி பழகிய இருவரும் நாளைடைவில் காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. அப்போது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தினேஷ் தனிமையில் இருந்ததாகவும் அதை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவி, தினேஷ் உடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
undefined
ஆனாலும் தொடர்ந்து மாணவியிடம் புகைப்படத்தை காட்டி தினேஷ் மிரட்டி வந்திருக்கிறார்.அத்துடன் ரவி என்கிற நபருக்கு அப்புகைப்படங்களை தினேஷ் அனுப்பவே, அவரும் மாணவிக்கு தவறான நோக்கத்தில் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் தினேஷை அதிரடியாக கைது செய்தனர். போக்சோவில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவாக இருக்கும் ரவி என்கிற நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.